இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோர், வட மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் எதிர்கால வாய்ப்புகள் தொடர்பான வட்ட மேசை மாநாட்டை முன்னெடுத்திருந்தனர்.

2022/10/31

 
ஒக்டோபர் 28 ஆம் திகதி இடம்பெற்ற இந்த மாநாட்டில், வட பிராந்தியத்தின் நிலைபேறான பொருளாதார அபிவிருத்தி மற்றும் எதிர்காலம் என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில், ஆசிய நாடுகளின் தூதுவர்கள், அபிவிருத்தி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். பங்குபற்றுநர்கள் தமது அனுபவங்களைக் கொண்டு சிறந்த விடயங்களைப் பரிமாறியிருந்ததுடன், எதிர்கால வாய்ப்புகள் பற்றியும் கவனம் செலுத்தியிருந்தனர். வட மாகாணத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு பங்களிப்பு வழங்கும் வகையில் இந்த கலந்துரையாடல் அமைந்திருக்க வேண்டுமென தாம் எதிர்பார்ப்பதாக தூதுவர் மிசுகொஷி தெரிவித்தார். பல்வேறு துறைகளில் வட மாகாணத்துக்கு ஜப்பானினால் தொடர்ச்சியாக வழங்கப்படும் உதவிகள் தொடர்பிலும் மிசுகொஷி விளக்கமளித்திருந்தார். இவற்றில், மனித நேய உதவிகள் மற்றும் வர்த்தக மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புகள் போன்றனவும் அடங்கியுள்ளன.