இலங்கையின் இசை ரசிகர்களுக்கு விருந்தளித்த ஜப்பானிய பாரம்பரிய இசைக் கலைஞர்கள்

2022/12/15

ஜப்பானின் புகழ்பெற்ற இரு பாரம்பரிய இசைக் கலைஞர்களான நமி மகியொகா மற்றும் மொமொகோ இபுசுகி ஆகியோர் டிசம்பர் 8 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்து நேரடி இசை நிகழ்ச்சிகளை முன்னெடுத்திருந்தனர்.
 

களனி பல்கலைக்கழகம், Lanka Nippon BizTech Institute (LNBTI), தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் Bon-odori திருவிழா, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை மன்றக் கல்வியகம் மற்றும் செய்கி முன்பள்ளி ஆகியவற்றில் தமது நிகழ்ச்சிகளை முன்னெடுத்திருந்தனர். மூன்று இழைகளைக் கொண்ட பாரம்பரிய ஜப்பானிய இசைக் கருவியைக் கொண்ட Shamisen ஐ இசைத்து இசைக் கலையை மகியொகா வெளிப்படுத்தியிருந்ததுடன், பாரம்பரிய ஜப்பானிய இசைக் கருவியான டைகோ என்பதைப் பயன்படுத்தி இபுசுகி தமது இசை நிகழ்ச்சியை முன்னெடுத்திருந்தார். பார்வையாளர்கள் இந்த புதிய வகை இசைகளுக்கு செவிமடுத்து பரவசத்தில் ஆழ்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
 

 ஜப்பானிய மற்றும் இலங்கை மக்களிடையேயான கலாசார பரிமாற்றத்துக்கு அவர்களின் இசை நிகழ்வு பங்களிப்பு வழங்கியிருந்ததுடன், இரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாக 70 வருட பூர்த்தியைக் குறிக்கும் வகையிலும் அமைந்திருந்தது.
 

ஸ்ரீ லங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான இணையத்தளம்:

https://m.youtube.com/watch?v=84X9jtPNV4U