மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு Grant Assistance for Grassroots Human Security Projects ஊடாக உதவ ஜப்பான் நடவடிக்கை
2023/3/9
ஜப்பானிய அரசாங்கத்தினால் இலங்கையின் மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கிராமிய வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக 203,703 அமெரிக்க டொலர்கள் (சுமார் ரூ. 73.5 மில்லியன்) வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு 2023 மார்ச் மாதம் 9 ஆம் திகதி, ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும், தொழில்புரியும் பெண்களின் குரல் (VOWW) தலைவி ஹர்ஷனி சந்தமாலி ஞானசிங்க, வீதிச் சிறுவர் (Street Child) நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் அமரசிங்கம் கஜேந்திரன் மற்றும் பெரகமன அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி தர்மா எஸ். சமரநாயக்க ஆகியோருடன் கைச்சாத்திட்டிருந்தார்.
“Grant Assistance for Grassroots Human Security Projects” எனும் திட்டத்தினூடாக, அம்பாறையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் நீர்ப்பாசன நாளிகைக் கட்டமைப்பு நிறுவும் திட்டம், மட்டக்களப்பின் மாவடிமுன்மாரி அரச தமிழ் கலவன் பாடசாலையில் பாடசாலைக் கட்டடம் நிர்மாணித்தல் திட்டம் மற்றும் மொனராகலையில், கொட்டியாகல பிரதேசத்தில் பொது வீதி நிர்மாணத் திட்டம் போன்றவற்றை முன்னெடுப்பதற்காக இந்த உதவி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களைச் சேர்ந்த இலகுவில் பாதிப்புறக்கூடிய மக்களுக்கு நிலைபேறான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஜப்பானின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை தூதுவர் மிசுகொஷி உறுதி செய்திருந்தார். இதற்காக உள்ளூராட்சி சபைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து வடக்கு கிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த பின்தங்கிய மக்களுக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சி பெறுவதற்கும், நிலைபேறான வளர்ச்சியை எய்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக தெரிவித்தார்.
“Grant Assistance for Grassroots Human Security Projects” எனும் திட்டத்தினூடாக, அம்பாறையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் நீர்ப்பாசன நாளிகைக் கட்டமைப்பு நிறுவும் திட்டம், மட்டக்களப்பின் மாவடிமுன்மாரி அரச தமிழ் கலவன் பாடசாலையில் பாடசாலைக் கட்டடம் நிர்மாணித்தல் திட்டம் மற்றும் மொனராகலையில், கொட்டியாகல பிரதேசத்தில் பொது வீதி நிர்மாணத் திட்டம் போன்றவற்றை முன்னெடுப்பதற்காக இந்த உதவி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களைச் சேர்ந்த இலகுவில் பாதிப்புறக்கூடிய மக்களுக்கு நிலைபேறான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஜப்பானின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை தூதுவர் மிசுகொஷி உறுதி செய்திருந்தார். இதற்காக உள்ளூராட்சி சபைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து வடக்கு கிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த பின்தங்கிய மக்களுக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சி பெறுவதற்கும், நிலைபேறான வளர்ச்சியை எய்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக தெரிவித்தார்.

அம்பாறையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் நீர்ப்பாசன விநியோகக் கட்டமைப்பு நிறுவும் திட்டத்தினூடாக, அணைக்கட்டு மற்றும் நீர்ப்பாசன நாளிகைக் கட்டமைப்பு மறுசீரமைப்பு நிர்மாணம் போன்றவற்றினூடாக விவசாயத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு போன்றவற்றுக்கு நிலைபேறான நீர் முகாமைத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இலங்கையின் உலர் வலயத்தில் இந்தப் பிராந்தியம் அமைந்துள்ளதுடன், தற்போது காணப்படும் நீர்ப்பாசனக் கட்டமைப்பு யுத்தம் காரணமாக சேதமடைந்து காணப்படுகின்றமையினால், பெரும்பாலான விவசாயிகள் மழை காலத்தில் தமது காணிகளில் சில மாதங்களுக்கு பயிர்ச் செய்கையை மேற்கொள்கின்றனர். புதிய நீர்ப்பாசனக் கட்டமைப்பினூடாக, 595 குடும்பங்களுக்கு வருடம் முழுவதிலும் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு, விளைச்சல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இந்தத் திட்டத்துக்கான மானியத் தொகை ஒதுக்கீடு தொடர்பில் ஞானசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் திட்டத்தில், (I) அணைகட்டு நிறுவுதல், (II) சேதமடைந்த நீர்ப்பாசனக் கட்டமைப்பை மறுசீரமைத்தல் மற்றும் ஏற்கனவே காணப்படும் கால்வாய்களை நீடிப்பது மற்றும் திட்டத்தின் அனுகூலம் பெறுவோர்களான விவசாய அமைப்புகளையும் (FO) அதன் அங்கத்தவர்களையும் (ஆண் மற்றும் பெண்) மீள ஒழுங்குபடுத்தி வலிமைப்படுத்துவது போன்றன இந்தத் திட்டத்தில் அடங்கியுள்ளன. மறுசீரமைக்கப்படும் பிரதேசத்தில் பிரதானமாக வளர்க்கப்படும் பயிராக நெல் அமைந்துள்ளது. அத்தியாவசிய அங்கமான, 400 ஏக்கர் மரக்கறிச் செய்கைக்கு போதியளவு நீர் விநியோகத்தை மேற்கொள்வது என்பதும் அடங்கியுள்ளது. திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட காலப்பகுதியில் இந்த பிரேரிக்கப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளன. பாலின சமத்துவத்தைப் பொறுத்தமட்டில், பெண்களை ஈடுபடுத்துவது தொடர்பில் பொதுவாகக் காணப்படும் போதியளவு விழிப்புணர்வின்மை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளதுடன், பெண்கள் வலுவூட்டல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், ஆரோக்கியமான பாலின சமநிலையை பேணும் பணிகளும் தொடரும்.” என்றார்.

மட்டக்களப்பு, மாவடிமுன்மாரி அரச தமிழ் கலவன் பாடசாலையில் பாடசாலைக் கட்டடம் நிறுவும் திட்டத்தினூடாக, இந்தப் பாடசாலையில் சிறுவர்களுக்கு தமது கல்விச் செயற்பாடுகளை போதியளவில், சௌகரியமாகத் தொடர்வதற்கு அவசியமான பாடசாலைக் கட்டடத்தை நிர்மாணித்து வழங்குவதாக அமைந்துள்ளது. பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியில் அமைந்திருப்பதால், வலயக் கல்வி அலுவலகத்தினால் இந்தப் பாடசாலை “மிகவும் பின்தங்கியது” என வகைப்படுத்தப்பட்டுள்ளது. போதியளவு வகுப்பறைகள் இன்மையினால், தற்போது சில வகுப்புகள், வெளியிடப் பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்றன. புதிய கட்டடம் நிறுவப்பட்டதும், பாதுகாப்பான வகுப்பறைகள் மற்றும் ICT அறை போன்றன பாடசாலை மாணவர்களுக்குக் கிடைக்கும். பாடசாலையின் 113 சிறுவர்கள் மற்றும் 13 ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான வகுப்பறையில் கற்றல் மற்றும் கற்பித்தல் அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
அமரசிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், “வீதிச் சிறுவர் (Street Child) அமைப்பு 21 நாடுகளில் பணியாற்றுவதுடன், குறைந்த வளங்களைக் கொண்ட சூழலில் மற்றும் அவசரநிலைகள் நிலவும் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்கள் பாதுகாப்பாக, பாடசாலைகளில் பயில்வதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. இலங்கையில், இந்த அமைப்பினூடாக 2017 ஆம் ஆண்டு முதல் வினைத்திறனான ஆரம்பக் கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன், குறைந்த செயற்பாடுகள் நிலவும் மாவட்டங்களில் பாடசாலை மறுசீரமைப்புப் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. உலகின் பெருமளவில் பின்தள்ளப்பட்ட சிறுவர்கள் வசிக்கும் நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுகின்றது. பல வருடங்களாக நிலவிய யுத்தம், அரசியல் தளம்பல்கள் மற்றும் கொவிட்-19 போன்றன காரணமாக, நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. இந்த சிறுவர்களுக்கு பாடசாலைக் கல்வியைத் தொடர்வதற்கும், எதிர்காலம் தொடர்பில் சிறிதளவேனும் எதிர்பார்ப்பைக் கொண்டிருப்பதற்கு எமது ஆதரவு அவசியமாக உள்ளது.” என்றார்.

மொனராகலை, கொட்டியாகல பிரதேசத்தில் பொது வீதி நிர்மாணிக்கும் திட்டத்தினூடாக, கொட்டியாகல பகுதியிலுள்ள பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு சந்தைகள், பாடசாலைகள் அல்லது வைத்தியசாலைகள் போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்வதற்கு வீதி வசதியை மேம்படுத்திக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு அருகாமையிலுள்ள நகரத்துக்கு சென்று தமது அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பாதுகாப்பான வீதிக் கட்டமைப்பு இன்மையிலான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவர்கள் தற்போது இடர்கள் நிறைந்த செப்பனிடப்படாத வீதியை பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பான வீதியை சென்றடைவதற்கு நடையாக 6 முதல் 7 கிலோமீற்றர்கள் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது. பிரேரிக்கப்பட்டுள்ள வீதியினூடாக, சுமார் 800 கிராமத்தவர்களுக்கு பாதுகாப்பாகவும், இலகுவாகவும் அருகாமையிலுள்ள நகரத்துக்கு சென்றுவரும் வசதி ஏற்படுத்தப்படும்.
சமரநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “GGP உதவியின் கீழ் முன்னெடுக்கப்பட்ட முதலாவது திட்டம், பெரகமகன கில்ட் அமைப்பினால் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தது. அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய கிராமமான லத்துகல பிரதேசத்தில் குழாய் கிணறுகள் நிறுவுதல் மற்றும் சமூக அபிவிருத்திப் பணிகள் போன்றன அதன் போது முன்னெடுக்கப்பட்டிருந்தன. மொனராகலை மாவட்டத்தின், சியம்பலாண்டுவ பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொட்டியாகல பிரதேசத்தின் 2.5 கிலோமீற்றர் நீளமான தெவுபுதகம வீதியை நிறுவுவதற்காக GGP நிதி வசதி வழங்கப்பட்டுள்ளது. வீதிக் கட்டமைப்பு மேம்படுத்தலினூடாக, வறுமையான விவசாயிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் முழுச் சமூகத்துக்கும் போக்குவரத்துகளை சீராக மேற்கொள்வதற்கு பெரும் உதவியாக அமைந்திருக்கும். ஜப்பானிய GGP உதவியின் கீழ் இந்தத் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டதும், சமூகத்தினர் பல பயன்களைப் பெறுவார்கள்.” என்றார்.

இலங்கையில் 1989 ஆம் ஆண்டில் GGP திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்த மூன்று திட்டங்களும் அடங்கலாக, 314 திட்டங்களுக்கு மானிய உதவிகளை வழங்கியுள்ளது. இவற்றின் மொத்தப் பெறுமதி 57 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது.