ஜப்பான் அரசாங்கம், இலங்கைச் சிறார்களுக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளை வழங்குவதற்காக மேலும் 1.8 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட தொகையை வழங்கி அதன் தொடர்ச்சியான பங்களிப்பினை உறுதிப்படுத்துகின்றது
2023/3/16
கொழும்பு, 16 மார்ச் 2023 – இலங்கையில் மிகவும் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய குழந்தைகளுக்கான ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் அவசர மனிதாபிமான உதவிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான புதிய பங்களிப்பினை வழங்கியுள்ளதோடு, இது ஏறத்தாழ 600,000 க்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு சுத்தமான நீர், நல்லாரோக்கியம், சிறந்த சுகாதாரம், ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கான சிகிச்சை என்பன கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும்.
இலங்கை தற்போது முகங்கொடுக்கும் பொருளாதார நெருக்கடியினால் ஏழைகள் மற்றும் இலகுவில் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் விகிதாசார ரீதியில் அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கும் அதேவேளை, இது சிறுவர்கள் மீது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் மிகவும் கடுமையானது. ஏனெனில், போசாக்கு நிறைந்த ஒரு உணவு வேளை கிடைப்பது என்பது இன்று குழந்தைகள் எதிர்கொள்ளும் மிகப் பெரும் எச்சரிக்கை நிலையாக உருவெடுத்துள்ளதுடன், மிகவும் இலகுவில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் சிறுவர்களுக்கு சவர்க்காரமிட்டு கைகளை கழுவும் சிறந்த சுகாதாரப் பழக்கத்தைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாதுள்ளதாகவும் இனங்காணப்பட்டுள்ளது. இது சிறுவர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் MIZUKOSHI Hideaki, அவர்கள், “ இவ் இக்கட்டான நிலைமையில் இலங்கைக்கு உதவும் முகமாக மேலதிக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். கடந்த வருடத்தில் பொருளாதார நெருக்கடி துவங்கியதிலிருந்து ஜப்பான் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தினூடாக வழங்கியுள்ள மொத்த உதவித் தொகை 3.8 மில்லியன் அமெரிக்கா டொலரைத் தாண்டியுள்ளது. ஜப்பான் தொடர்ந்தும் இலங்கைக்குப் பக்கபலமாக இருந்து ஒத்துழைப்புக்களை வழங்கும்” என்று தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் இலங்கைச் சிறார்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக விரைவாகவும் ஆர்வத்துடனும் இயங்கிக்கொண்டிருப்பதுடன், வறுமை, கொவிட்-19 தொற்று மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடி என்பவற்றால் மிகவும் மோசமான விளைவுகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் மிகவும் இலகுவில் பாதிப்புறக்கூடியவர்கள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பினையும் உறுதிசெய்கின்றது.
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் அவர்கள், “சிறுவர்களின் நீண்டகால மற்றும் குறுகிய காலத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கை அரசாங்கத்தின் கூட்டொத்துழைப்புடன் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் செயற்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஜப்பான் அரசாங்கம் பாரிய பங்களிப்புக்களைத் தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருக்கின்றது“ என்று குறிப்பிட்டதுடன், “ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் சிறுவர்களை இலக்காகக் கொண்டு நடைமுறைப்படுத்தும் அதன் பணிகளுக்காக இவ்வாறான பங்களிப்புக்களை நம்பியுள்ளது” என்றும் வலியுறுத்தினார்.
மேலும், இப் பங்களிப்பானது ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் மற்றும் பங்காளி நிறுவனங்களுக்கு ஏனையவற்றுடன், குறிப்பாக கீழே குறிப்பிட்ட நிகழ்ச்சித்திட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவேற்ற உதவியாக இருக்கும்.

- அதிதீவிர மந்தப் போசாக்கினால் பாதிக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 9,000 குழந்தைகளுக்கு சிகிச்சை முறை உணவுகளை வழங்குவதோடு, நோயாளிகளைத் தங்கவைத்து சிகிச்சை வழங்குவதை முன்னுரிமைப்படுத்தியுள்ள 97 வைத்தியசாலைகளில் பல்வேறு கோளாறுகளுடன் இருக்கும் குழந்தைகளுக்கு பயனுள்ள பராமரிப்பினை வழங்குவதற்குத் தேவையான ஆதரவினை நல்குதல்.
- பல்வேறு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு வருடங்களுக்குக் கீழ்ப்பட்ட 200,000 குழந்தைகளுக்கான பல்-நுண்ணூட்டச்சத்துத் தூள்களை கொள்வனவு செய்து விநியோகித்தல்.
- கிட்டத்தட்ட 400,000 பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்/ பராமரிப்பாளர்களுக்கு சிறந்த சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான மிகத் துல்லியமான தகவல்களைக் கிடைக்கச் செய்தல்.
- தெரிவுசெய்யப்பட்ட மகப்பேற்று மற்றும் சிறுவர் வைத்தியசாலைகளுக்கு பாதுகாப்பான மற்றும் போதியளவிலான நீர், சுகாதாரம் மற்றும் உடல் நலம் பேணல் வசதிகளை வழங்குவதினூடாக கிட்டத்தட்ட 100,000 மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு உதவுதல்.