தொற்றுகளைக் கொண்ட கழிவு முகாமைத்துவ மேம்படுத்தல் திட்டத்துக்கு ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து 503 மில். ஜப்பானிய யென்கள் உதவி

2023/4/26

கொவிட்-19 தொற்றுப் பரவலுடன் அதிகரித்துக் காணப்படும், தொற்றுகளைக் கொண்ட கழிவு முகாமைத்துவ வசதிகளை மேம்படுத்துவதற்காக 503 மில்லியன் ஜப்பானிய யென்களை (3.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்குவதற்கான பரிமாற்ற உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி கைச்சாத்திட்டிருந்தார். இந்நிகழ்வு ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்றது. 
 
கொவிட்-19 தொற்றுடைய கழிவுகளை நிர்வகிப்பது தொடர்பான 2020 மார்ச் மாதம் வெளியிடப்பட்ட சுகாதார அதிகார அமைப்புகளின் வழிகாட்டுதல்களின் பிரகாரம், மருத்துவ கழிவு தூய்மையாக்கல் மற்றும் தொற்று நீக்கல் சாதனங்களின் பயன்பாட்டினூடாக இந்த கழிவுகளை நிர்வகிப்பது ஊக்குவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், நிதி நெருக்கடி நிலை காரணமாக, போதியளவு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.


மேலும், கொவிட்-19 தொற்றுப் பரவலுடன், தொற்றுக்களடங்கிய கழிவுகள் அதிகரித்துக் காணப்படும் நிலையில், இலங்கையில் காணப்படும் தொற்றுகள் அடங்கிய கழிவு நிர்வகிப்பு வசதிகளின் பதப்படுத்தல் வசதிகளின் கொள்ளளவை விட அதிகரித்த தேவை காணப்படுகின்றது. அதன் காரணமாக, வைத்தியசாலை ஊழியர்கள், தொற்றுகள் அடங்கிய கழிவுப் பொருட்களுக்கு வெளிப்படுத்தப்படுவதுடன், வைத்தியசாலைகளை சூழ காணப்படும் குடியிருப்பாளர்களுக்கு கழிவுகளை திறந்தவெளிகளில் எரிப்பதால் டையொக்சின்களின் வெளிப்பாடு, புகை மற்றும் துர்மணம் போன்ற சுகாதார சீர்கேடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையும் எழுந்துள்ளது.


இந்தத் திட்டத்தினூடாக, வெப்பநிலை கட்டுப்பாட்டுடனான மருத்துவ கழிவு தூய்மையாக்கிகள் மற்றும் வாயு தூய்மையாக்கல் சாதனங்கள் போன்றன இலங்கையின் 9 மாகாணங்களையும் உள்வாங்கி 15 வைத்தியசாலைகளில் நிறுவப்படும். இந்தத் திட்டத்தினூடாக, தொற்றுக் கழிவுகளை கையாளும் வசதிகளின் கொள்ளளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், குறைந்தளவு சூழல் தாக்கங்களுடன் அதிகளவு கழிவுகளை பதப்படுத்துவதற்கு உதவியாக அமைந்திருக்கும். மேலும், சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்படக்கூடிய சுமையை தணிப்பதிலும் பங்களிப்பு வழங்கும்.