சுனில் காமினி விஜேசிங்ஹ மற்றும் பேராசிரியர். உபுல் பண்டார திசாநாயக்க ஆகியோருக்கு ஜப்பானின் "The Order of the Rising Sun" உயர் கௌரவிப்பு
2023/4/29
2023 ஏப்ரல் 29 ஆம் திகதி ஜப்பானின் உயர் விருதான “The Order of the Rising Sun” பெற்றுக் கொள்வோரின் விவரங்கள் ஜப்பானிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. இந்த ஆண்டில், இலங்கையைச் சேர்ந்த இருவருக்கு, இரு நாடுகளுக்குமிடையிலான பங்களிப்புகளை மேம்படுத்துவதில் ஆற்றியிருந்த பங்களிப்புக்காக கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. அவர்களின் விவரங்கள் வருமாறு.

திரு. சுனில் காமினி விஜேசிங்ஹ
திரு. சுனில் காமினி விஜேசிங்ஹ
The Order of the Rising Sun, Gold and Silver Rays
ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார சம்மேளனத்தின் முன்னாள் தலைவர்
ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதிலும், பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதிலும் பங்களிப்பு வழங்கியிருந்தார்.

பேராசிரியர். உபுல் பண்டார திசாநாயக்க
பேராசிரியர். உபுல் பண்டார திசாநாயக்க
The Order of the Rising Sun, Gold Rays with Neck Ribbon
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாக சபையின் தவிசாளர் ஜப்பான் மற்றும் இலங்கை இடையே கல்விசார் பரிமாற்றங்களை ஊக்குவித்திருந்ததுடன், பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்துவதில் பங்காற்றியிருந்தார்
ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார சம்மேளனத்தின் (JASTECA) முன்னாள் தலைவரான சுனில் காமினி விஜேசின்ஹ, ஜப்பானின் நிறுவனசார் முகாமைத்துவ கட்டமைப்பை ஊக்குவிப்பதில் பங்களிப்பு வழங்கியிருந்ததுடன், அவற்றில், இலங்கையில் JASTECA ஐ நிறுவி, அதன் ஸ்தாப அங்கத்தவர்களில் ஒருவராக திகழ்ந்ததனூடாக, “5S (வினைத்திறனாக, செம்மையாக மற்றும் பாதுகாப்பாக பணிகளை முன்னெடுக்கும் வகையில் நிறுவனப் பகுதிகளுக்கான கட்டமைப்பு)”, “Quality Circles (தர மற்றும் உற்பத்தித்திறன் மேம்படுத்தல் திட்டங்களை முன்னெடுப்பதற்கு நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களை ஈடுபடுத்தும் கட்டமைப்பு)”, Total Quality management method, மற்றும் Kaizen (நிறுவனசார் செயற்பாடுகளை மேம்படுத்தும் முறைமை) முன்னெடுக்க ஏதுவாக இருந்தமை அடங்கியிருந்தது. 5S கட்டமைப்பை அறிமுகம் செய்யும் இலங்கையின் நிறுவனங்களுக்கு அவற்றின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் விருதொன்றையும் இவர் உருவாக்கியிருந்தார். மேலும், ஜப்பானிய கட்டமைப்பு முகாமைத்துவம் மற்றும் 5S தொடர்பில் காணப்படும் அனுகூலங்கள் தொடர்பில் இலங்கையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு ஜப்பானிய முகாமைத்துவ முறை மற்றும் 5S ஆகியன பற்றிய பல்வேறு சர்வதேச மாநாடுகளை ஏற்பாடு செய்திருந்தார். மேலும், பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் இவை பற்றிய ஆக்கங்களை பிரசுரித்திருந்ததுடன், பல நிகழ்வுகளில் பங்கேற்று அது தொடர்பில் விரிவுரைகளை வழங்குவதிலும், பேச்சாளராகவும் திகழ்ந்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் ஆலோசகராக, ஜப்பானிய முகாமைத்துவ கட்டமைப்பு பற்றி போதிப்பதற்கு இவர் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்ததுடன், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதில் ஆர்வம் செலுத்திய உள்நாட்டு மற்றும் ஜப்பானிய நிறுவனங்களுக்கு ஆதரவளித்திருந்தார். நீண்ட கால மற்றும் பல்வேறு செயற்பாடுகளினூடாக, பொருளாதார உறவுகளை வலிமைப்படுத்துவதில் விஜேசிங்ஹ பங்களிப்பு வழங்கியதுடன், ஜப்பான் மற்றும் இலங்கை இடையே பரஸ்பர புரிந்துணர்வை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தார்.
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தராக பேராசிரியர். உபுல் பண்டார திசாநாயக்க திகழ்வதுடன், பல்கலைக்கழக நிர்வாக சபையின் தவிசாளராகவும் அமைந்துள்ளார். துறையில் முன்னோடி எனும் வகையிலும், பீடாதிபதி எனும் வகையிலும், இவர், இலங்கை மற்றும் ஜப்பானிடையே பற்கள் விஞ்ஞானம் தொடர்பான கல்விசார் பங்காண்மைகளை ஊக்குவிப்பதில் பங்காற்றியிருந்தார்.
“பற்கள் விஞ்ஞான பீடத்தின் பற்கள் கல்வி மற்றும் வாய்ச் சுகாதார ஊக்குவிப்பு” எனும் JICA திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் பேராசிரியர் திசாநாயக்க முக்கிய பங்காற்றியிருந்தார். நவீன வசதிகள் படைத்த ஆய்வு வசதியை நிறுவுவதற்கு இதனூடாக பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்த வசதிகளால், ஜப்பானிய பங்காளர்களுடன் கல்விசார் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு பேராசிரியருக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதுடன், ஜப்பானின் பல்கலைக்கழகங்களின் பற்கள் தொடர்பான பிரிவுகளுடன் தொடர்பை பேணவும் முடிந்தது. மேலும், பேராதனை பல்கலைக்கழகத்தினால் பேராசிரியர் திசாநாயக்கவின் தலைமைத்துவத்தின் கீழ் JICA இன் மூன்றாம் நாட்டு கல்வி நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவற்றினூடாக, உயர் தரம் வாய்ந்த பற்கள் விஞ்ஞான புலமையாளர்கள் மற்றும் விசேடத்துவ அறிவுடையவர்கள் அண்மித்த நாடுகளில் உருவாக்கப்பட்டனர்.
பல்கலைக்கழக நிர்வாக சபையின் அங்கத்துவ பொறுப்பை ஏற்று பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக இணைந்ததன் பின்னர், மற்றும் பல்கலைக்கழக நிர்வாக சபையின் தவிசாளராக நியமிக்கப்பட்டதன் பின்னரும், இலங்கை மற்றும் ஜப்பானிடையேயான உறவை மேம்படுத்துவதில் பேராசிரியர் திசாநாயக்கவின் அர்ப்பணிப்பு என்பது மேலும் வலுப் பெற்றது. ஜப்பான் இலங்கை கைகோர்ப்பு கைகோர்ப்பு ஆய்வு மாநாடுகள் மற்றும் பல்வேறு இணைந்த ஆய்வு முன்னெடுப்புகள் மற்றும் பங்காண்மை புரிந்துணர்வு உடன்படிக்கைகள் மேற்கொள்வதற்கு இவர் முக்கிய பங்காற்றியிருந்தார். இந்த முன்னெடுப்புகளில் பற்கள் விஞ்ஞானத்துக்கு அப்பால் விவசாயம், பொறியியல் மற்றும் சூழல்சார் கற்கைகள் போன்ற விடயங்கள் அடங்கியுள்ளன.
ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான கல்விசார் தொடர்புகளை இணைக்கும் பேராசிரியர் திசாநாயக்கவின் கல்விசார் சிறப்பு, ஒப்பற்ற அர்ப்பணிப்பு மற்றும் இரு நாடுகளுக்கிடையே கல்விசார் கைகோர்ப்புகளை எப்போதும் தொடர்ந்தும் இரு நாடுகளுக்குமிடையிலான இணைந்த செயற்பாடுகளை வலிமைப்படுத்தும்.
ஜப்பான் மற்றும் இலங்கை இடையே நட்புறவை கட்டியெழுப்புவதில் விஜேசிங்ஹ மற்றும் பேராசிரியர் திசாநாயக்க ஆகியோர் ஆற்றியிருந்த பங்களிப்புக்காக, ஜப்பான் தூதரகம் தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது.