உள்நாட்டில் கண்ணிவெடி அகற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு தூதுவர் பாராட்டு
2023/5/12
இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுக்கும் Delvon Assistance for Social Harmony, DASH பணிப்பாளரும் நிகழ்ச்சி முகாமையாளருமான ஆனந்த சந்திரசிறி மற்றும் SHARP, Skavita Humanitarian Assistance பணிப்பாளரும் நிகழ்ச்சி முகாமையாளருமான சரத் ஜயவர்தன ஆகியோருக்கு, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி அவர்களின் பாராட்டுதல்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வு 2023 மே மாதம் 12 ஆம் திகதி தூதுவரின் வாசஸ்தலத்தில் இடம்பெற்றது.

DASH மற்றும் SHARP ஆகியன யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களாக திகழ்கின்றன. ஜப்பான் அரசாங்கத்தினால் நிதியளிக்கப்படும் Grant Assistance for Grassroots Human Security Projects (GGP) திட்டத்தினூடாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளினூடாக மாத்திரமன்றி, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமாதானத்தை உறுதி செய்யும் வகையில், மீள்குடியேற்றம் மற்றும் ஒருமைப்பாடு செயற்பாடுகளினூடாக, ஜப்பான் மற்றும் இலங்கை இடையே நட்புறவை கட்டியெழுப்புவதிலும், பரஸ்பர புரிந்துணர்வை கட்டியெழுப்புவதிலும் சந்திரசிறி மற்றும் ஜயவர்தன ஆகியோர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.