இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஜப்பான் வழியமைக்கின்றது
2023/7/12
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, ஜுலை 12ஆம் திகதி, இலங்கையிலுள்ள டிஜிட்டல் டெரெஸ்டிரியல் தொலைக்காட்சி ஒளிபரப்பு திட்டத்தினால் (DTTB) தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் நியமங்களை, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளித்திருந்தார்.

ஜப்பானிய ODA கடன் உதவியினூடாக, 2014 ஆம் ஆண்டு முதல் DTTB செயற்திட்டத்துக்கு ஜப்பான் தொடர்ச்சியாக ஆதரவளிக்கின்றது. DTTB திட்டத்தினால் இலங்கைக்கு இரு பாரிய அனுகூலங்கள் பெற்றுக் கொடுக்கப்படும். இலங்கையிலுள்ள மக்களுக்கு High-Definition தொலைக்காட்சி அலைவரிசைகளை இலவசமாக கண்டுகளிக்கும் அனுபவத்தை வழங்குவது மாத்திரமன்றி, வானொலி அலைவரிசைகளை வினைத்திறனான வகையில் பயன்படுத்தி தொலைத்தொடர்பாடல் உட்கட்டமைப்புகளை வலிமைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கும்.

இலங்கை அரசாங்கம் அதன் முக்கிய முன்னுரிமை அம்சங்களில் ஒன்றாக கவனம் செலுத்தும் “டிஜிட்டல் பொருளாதாரம்” என்பதை நடைமுறைப்படுத்துவதிலும், இந்தப் பிரிவில் பரஸ்பர ஒன்றிணைவை இனங்காண்பதிலும் இந்தத் திட்டம் எந்தளவு முக்கியமானது என்பதை மிசுகொஷி விளக்கமளித்திருந்தார்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் விரைவில் பூர்த்தி செய்யப்படுவதுடன், இலங்கையில் நிலைபேறான அபிவிருத்தியை எய்துவதற்கும், ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே பரஸ்பர உறவை மேலும் கட்டியெழுப்புவதற்கும் உதவியாக அமைந்திருக்கும்.
