இலங்கையர்களின் சமூகப்பொருளாதார மீள்ஒருங்கிணைப்புக்கு ஜப்பான் ஆதரவு

2023/7/13
கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக இலங்கைக்கு மீளத் திரும்பியிருந்த இலங்கையின் புலம்பெயர் பணியாளர்களின் சமூகப் பொருளாதார மீள் ஒருங்கிணைப்புக்கு ஆதரவளிக்கும் திட்டத்தின் பூர்த்தி நிகழ்வு கொழும்பிலுள்ள Mövenpick ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுக்குழுவின் பிரதி தலைமை அதிகாரி/அமைச்சரான கட்சுகி கொட்டாரோ கலந்து கொண்டார். இந்நிகழ்வு 2023 ஜுலை 13ஆம் திகதி நடைபெற்றது.
 

கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக இலங்கைக்கு மீளத் திரும்பியிருந்த இலங்கையின் புலம்பெயர் பணியாளர்களின் சமூகப் பொருளாதார மீள் ஒருங்கிணைப்புக்கு ஆதரவளிக்கும் திட்டத்துக்கு ஜப்பானிய அரசாங்கம் நிதி வழங்கியிருந்ததுடன், புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM), சர்வதேச தொழிலாளர் நிறுவகம் (ILO) மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு தொழில்வாய்ப்பு அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுத்திருந்தன. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக, வெளிநாடுகளில் பணிபுரிந்த நிலையிலிருந்தவர்கள் இலங்கைக்கு மீளத் திரும்பியிருந்த நிலையில், அவர்களின் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து, வாழ்வாதாரத்தை மீளமைப்பதிலும், எதிர்காலத்தில் தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு அவசியமான திறன் விருத்தியை மேற்கொள்வது எனும் முக்கிய பங்கையும் இந்தத் திட்டம் ஆற்றியிருந்தது.
 
இலங்கையில் சமாதானம் மற்றும் சமூகப்பொருளாதார விருத்திக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிப்பதுடன், IOM, ILO மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து இந்தத் திட்டத்தினூடாக, இலக்கு வைக்கப்பட்ட அனுகூலம் பெறுநர்களுக்கு நிலைபேறான வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், வருமானமீட்டும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


இலங்கை மக்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்க ஜப்பானிய அரசாங்கம் உறுதியாக தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், இந்தத் திட்டத்தினூடாக, இலங்கை மற்றும் ஜப்பானிடையே ஏழு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக நிலவும் நட்புறவை மேலும் கட்டியெழுப்பிக் கொள்ள பங்களிப்பு வழங்கும் எனவும் கருதுகின்றது.