ஜப்பானிய வெளி விவகார அமைச்சர் ஹயாஷி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சந்திப்பு
2023/7/29

ஜுலை 29 ஆம் திகதி மு.ப. 8.00 மணி முதல் சுமார் 75 நிமிடங்கள் வரை, இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானிய வெளி விவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமசா மற்றும் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடையே சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது பின்வரும் விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்தன.

2. கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் மேலதிக முன்னேற்றம் தொடர்பில் தமது எதிர்பார்ப்பை அமைச்சர் ஹயாஷி வெளிப்படுத்தியதுடன், அனைத்து கடன் வழங்கிய நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படையான மற்றும் ஒப்பிடக்கூடிய கடன் மறுசீரமைப்பின் முக்கியத்துவத்தைப் பற்றி குறிப்பிட்டார். கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளின் போது வெளிப்படைத்தன்மை மற்றும் ஒப்பீடு அடிப்படையிலான செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பான உறுதி மொழியை ஜனாதிபதி விக்ரமசிங்க வழங்கியதுடன், கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் ஜப்பான் ஆற்றிவரும் பங்களிப்புக்காக தமது நன்றியையும் தெரிவித்திருந்தார்.
3. ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை தலைமை தாங்கவுள்ள இந்து சமுத்திர ரிம் சம்மேளனத்துடன் (IORA) கூட்டுறவில் ஜப்பான் காண்பிக்கும் முக்கியத்துவம் தொடர்பில் அமைச்சர் ஹயாஷி குறிப்பிட்டார். இந்த அமைப்பின் தற்போதைய தலைமை நாடாக திகழும் ஜப்பான் ஆற்றியுள்ள பங்களிப்புகளை ஜனாதிபதி விக்ரமசிங்க வரவேற்றிருந்தார்.
4. இரு தரப்பு உறவுகள், கிழக்கு ஆசியா அடங்கலான பிராந்திய சூழ்நிலை மற்றும் பொருளாதார கூட்டுறவு தொடர்பான தமது நிலைப்பாடுகளையும் இவர்கள் பகிர்ந்து கொண்டனர்.