மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசில் (JDS) திட்டத்துக்கு ரூ. 611 மில்லியன் மானிய உதவியை ஜப்பான் வழங்கியது
2023/7/29
ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமசா ஜுலை 29ஆம் திகதி இலங்கைக்காக விஜயத்தை மேற்கொண்டிருந்த போது, மனித வளங்கள் அபிவிருத்தி புலமைப்பரிசில் திட்டத்துக்காக உடன்படிக்கையில் இலங்கையின் நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் கே.எம்.எம். சிறிவர்தன மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தார். அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், இலங்கையின் பிரதமர் தினேஷ் குணவர்தனவும் பங்கேற்றிருந்தார்.

2010 ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் ஸ்தாபிக்கப்பட்டது முதல், இதுவரையில் இலங்கையின் 205 பொது அதிகாரிகளுக்கு ஆதரவளித்துள்ளது. தனிநபர்களின் திறன்களை கட்டியெழுப்புவதற்கு மாத்திரம் இந்தத் திட்டம் பங்களிப்பு வழங்குவது மாத்திரமன்றி, இலங்கையின் பொதுத் துறையின் நிறுவனசார் திறன்களை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பு வழங்கும். அதனூடாக, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுடன் தொடர்புடைய பல்வேறு நெருக்கடி நிலைமைகளிலிருந்து விடுபடுவதற்கும், எதிர்காலத்தில் சுபீட்சத்தை எய்துவதற்கும் இலங்கைக்கு உதவியாக அமையும்.
JDS அங்கத்தவர்கள் ஜப்பானுடன் பரஸ்பர உறவுகளை கட்டியெழுப்புவதற்கு எதிர்பார்க்கப்படுவதுடன், இரு நாடுகளுக்குமிடையே உறவுப் பாலமாக அமைந்திருப்பதற்கும், ஜப்பானில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் கல்வி மற்றும் சமூக செயற்பாடுகளினூடாக மனித வலையமைப்பு மேம்பாட்டையும் எய்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
நீண்ட கால நட்புநாடாக திகழும் ஜப்பான், நீண்ட கால நிலைபேறான பொருளாதார அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்காக பல திறன் கட்டியெழுப்பல் மற்றும் கொள்ளளவு விருத்தி செயற்பாடுகளினூடாக மனித வளங்கள் அபிவிருத்தி தொடர்பில் அதிகளவு அக்கறை கொண்டுள்ளது.
வருமானம் மற்றும் செலவீனங்கள், அரச உரிமை நிறுவனங்கள் மற்றும் மோசடி தவிர்ப்பு போன்ற பல பிரிவுகளில் மறுசீரமைப்புகள் இந்த ஆண்டில் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதுடன், 2023 ஆம் ஆண்டு என்பது, இலங்கையின் பொருளாதாரத்தின் மறுபிறப்பாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அனைத்து செயற்பாடுகளும் அவர்களிடையே இணைப்பை வலுப்படுத்தி, இலங்கையை மீளக் கட்டியெழுப்ப பங்களிப்பு வழங்குவதுடன், தாம் கற்றுக் கொண்ட பாடங்களை இலங்கைக்கு மீளத் திரும்பியவுடன் செயலில் ஈடுபடுத்துவார்கள் எனவும் எதிர்பார்க்கின்றோம்.

இந்த உடன்படிக்கை பரிமாற்றத்தின் பிரகாரம், இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக ஜப்பானிய அரசாங்கம் ரூ. 611 மில்லியனை (284 மில்லியன் யென்) மானியத் தொகையை வழங்கியிருந்தது. பொதுத் துறையைச் சேர்ந்த இளம் நிறைவேற்று அதிகாரிகளை, ஜப்பானின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் பயிற்சியளித்து, அவர்களின் திறன்களை மேம்படுத்தி, எதிர்காலத்தில் தமது துறைகளில் தேசிய தலைவர்களாக திகழச் செய்வதற்கு தகையளிப்பது இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 17 பொதுத் துறை அதிகாரிகள் 2024 ஆம் ஆண்டு முதல் 2 முதல் 3 வருட கால மாஸ்டர்ஸ் அல்லது கற்கையைத் தொடர்வதற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பொதுக் கொள்கை, பெரும் பொருளாதாரம், பொது நிதி மற்றும் முதலீட்டு நிர்வாகம், தொழிற்துறை அபிவிருத்தி கொள்கை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நகர மற்றும் பிராந்திய அபிவிருத்தி ஆகிய தலைப்புகளில் அவர்களுக்கான உயர்கல்விகள் வழங்கப்படும்.