இணைந்த கடனளிப்பு பொறிமுறை (JCM) தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தல்: இலங்கையில் வெற்றிகரமான ஆய்வு அமர்வு முன்னெடுப்பு

2023/8/29
கொழும்பு, ஆகஸ்ட் 29, 2023 - இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நிலைபேறான அபிவிருத்தியை உறுதி செய்தல் மற்றும் குறைந்த காபன் வளர்ச்சி பங்காண்மையை ஊக்குவித்தல் தொடர்பில் முக்கிய நடவடிக்கை இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. கொழும்பில் இணைந்த கடனளிப்பு பொறிமுறை (JCM) ஆய்வு அமர்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஜப்பானிய தூதரகம், இலங்கை சுற்றாடல் அமைச்சு மற்றும் ஜப்பான் வெளி வர்த்தக நிறுவனம் (JETRO) ஆகியன இணைந்து செயற்திட்டம் JCM தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தும் தொனிப்பொருளில் இந்த அமர்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது


JCM ஆய்வு அமர்வில் 30 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் 70 க்கும் அதிகமான நபர்கள் பங்கேற்றிருந்ததுடன், இதில் இலங்கை மற்றும் ஜப்பானிய நிறுவனங்களின் பிரதிநிதிகளும் அடங்கியிருந்தனர். JCM தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல், இந்த முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்புடன் ஈடுபாட்டை கொண்டிருப்பது மற்றும் சிறந்த புரிந்துணர்வை ஊக்குவிப்பது தொடர்பில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தியிருந்தது.
 
ஜப்பானிய தூதரகத்தின் பிரதி தலைமை அதிகாரியும் அமைச்சருமான கட்சுகி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி. அனில் ஜாசிங்க ஆகியோர் இந்த அமர்வை ஆரம்பித்து வைத்ததுடன், JCM திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் குறிப்பிட்டிருந்தனர்.


பசுபிக் ஆலோசகர்களால் விசேடமான விரிவுரை இந்த நிகழ்வில் முன்னெடுக்கப்பட்டதுடன், JCM திட்டத்தின் அம்சங்களை இல்லாமல் செய்வது பற்றிய தகவல்கள், இரு நாடுகளுக்கும் கிடைக்கக்கூடிய அனுகூலங்கள் மற்றும் சூழல் பாதுகாப்பு தொடர்பில் அவற்றின் பரந்தளவு உள்ளடக்கம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான பல அம்சங்கள் வழங்கப்பட்டிருந்தன.
 
JETRO கொழும்பின் வதிவிட பிரதிநிதியான ஒயி, சுற்றாடல் துறையில் ஜப்பானிய நிறுவனங்களின் நிலைப்பாடுகள் பற்றிய அறிமுகம் மற்றும் காபனகற்றல் செயற்பாடுகளில் முதலீடுகளுக்கான எதிர்பார்ப்புகள் தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தார்.
 
இந்த ஆய்வு அமர்வின் இணைந்த அம்சம் என்பது, ஜப்பானிய மற்றும் இலங்கையின் அர்ப்பணிப்பை உறுதி செய்வதாக அமைந்திருந்ததுடன், அதனூடாக பிரகாசமான, பசுமையான எதிர்காலத்தை பகிரப்பட்ட அறிவு மற்றும் நிபுணத்துவத்தினூடாக ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. JCM உடன் சிறந்த புரிந்துணர்வுடனான ஈடுபாட்டை ஊக்குவிப்பதனூடாக, பல்வேறு இலங்கை மற்றும் ஜப்பானிய நிறுவனங்களுக்கு நிலைபேறான வளர்ச்சியை நோக்கிய பயணத்தை, காபன் வெளிப்பாட்டை குறைத்து முன்னெடுக்கக்கூடிய களத்தை ஏற்படுத்தியிருந்தது.