சுனில் காமினி விஜேசிங்கவுக்கு “The Order of the Rising Sun, Gold and Silver Rays” கௌரவிப்பு 2023 செப்டெம்பர் 19 ஆம் திகதி வழங்கப்பட்டது
2023/9/20

ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வை மேம்படுத்தியதுடன், பொருளாதார உறவுகளை வலிமைப்படுத்தியிருந்தமைக்கும், இலங்கையில் ஜப்பானிய முகாமைத்துவ முறைகளை பகிர்ந்திருந்தமையையும் கௌரவிக்கும் வகையில் ஜப்பான் இலங்கை தொழில்நுட்ப மற்றும் கலாசார சம்மேளனத்தின் (JASTECA) முன்னாள் தலைவர் சுனில் காமினி விஜேசிங்கவுக்கு, “The Order of the Rising Sun, Gold and Silver Rays” கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. 2023 செப்டெம்பர் 19ஆம் திகதி இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகியினால் இந்த கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.
இலங்கையில் ஜப்பானிய முகாமைத்துவ செயற்பாடுகளை ஊக்குவிப்பதில் விஜேசிங்க முக்கிய பங்காற்றியிருந்தார். ஜப்பானிய தொழில்நுட்பம் மற்றும் முகாமைத்துவ தொழில்நுட்பங்களை பின்பற்றுவது தொடர்பான அவரின் அனுபவம் 1980ஆம் ஆண்டு காலத்தில் ஆரம்பமாகியது. JASTECA இன் அர்ப்பணிப்புடைய அங்கத்தவர் எனும் வகையில், இவர் தனது பொறியியல் பின்புலத்தை கொண்டிருந்ததுடன், "Quality Circles," எனும் நிறைவேற்று அதிகாரமற்ற ஊழியர்களை ஈடுபடுத்தி தரம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்தல், "5S" கொள்கை மற்றும் "Kaizen"போன்ற நிறுவனசார் மேம்படுத்தல் நுட்பங்களை பின்பற்றுவதில் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.

இலங்கையில் ஜப்பானிய முகாமைத்துவ நுட்பங்களை அறிமுகம் செய்வது மாத்திரமன்றி, அவற்றை உறுதியாக நிறுவுவதிலும் விஜேசிங்க ஆற்றியிருந்த பங்களிப்புக்கு தூதுவர் மிசுகொஷி பாராட்டியிருந்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் இவர் முக்கிய பங்காற்றியிருந்ததுடன், அதனூடாக மக்களின் நலனை மேம்படுத்துவதிலும் பங்களிப்புச் செய்திருந்தார் என குறிப்பிட்டிருந்தார். மேலும், ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே விஜேசிங்கவின் பணி ஆழமான புரிந்துணர்வை ஏற்படுத்தயிருந்தது என்பதை தூதுவர் மிசுகொஷி குறிப்பிட்டிருந்தார்.
ஜப்பானுடன் நட்புறவை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்காற்றியிருந்த வெளிநாட்டு பிரஜைகளுக்கு ஜப்பானிய முடியரசரினால் “The Order of the Rising Sun” கௌரவிப்பு வழங்கப்படுகின்றது.
ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான பரஸ்பர உறவை மேலும் மேம்படுத்துவதற்கு இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.