WFP உடன் பாடசாலைகள் மற்றும் சுகாதார சிகிச்சைப் பகுதிகளுக்கு ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி விஜயம்
2023/10/26

ஒக்டோபர் 25 ஆம் திகதி மாதிவல பகுதியில் நடைபெற்ற பாடசாலை மற்றும் தாய்சேய், சுகாதார சிகிச்சைப் பகுதிகள் கையளிப்பு வைபவமொன்றில் இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தானிகர் மிசுகொஷி பங்கேற்றிருந்தார். ஐக்கிய நாடுகள் உலக உணவு நிகழ்ச்சித் திட்டத்தின் (WFP), நீடிக்கப்பட்ட அவசர உணவு உதவி மற்றும் போஷணை ஆதரவு திட்டத்தினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்துக்கு ஜப்பானிய அரசாங்கம் ஆதரவளித்திருந்தது. இந்த நிகழ்வில் WFP ஸ்ரீ லங்காவின் இலங்கைக்கான பணிப்பாளரும் பிரதிநிதியுமான அப்துர் ரஹீம் சித்தீகி பங்கேற்றிருந்தார். (WFP Sri Lanka).

ஸ்ரீ ராகுல மகா வித்தியாலயத்தில், பாடசாலை உணவாகாரங்களை தூதுவர் தாம் பிரத்தியேகமான முறையில் மாணவர்களுக்கு வழங்கியிருந்தார். எமது ஒன்றிணைந்த ஆதரவினூடாக அந்த சிறுவர்கள் தமது உணவை மகிழ்ச்சிகரமாக உண்டு அனுபவத்தை கண்டு பூரிப்படைந்தார். மேலும், உடஹமுல்ல பகுதியில் தாய்சேய் மற்றும் சுகாதார சிகிச்சைப் பகுதிக்கான விஜயத்தின் போது, குழந்தைப்பேறை எதிர்பார்த்துள்ள தாய்மாருக்கு திரிபோஷா பொதிகளை தூதுவர் விநியோகித்திருந்தார். அதன் போது அந்த தாய்மாருடன் உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார். அதனூடாக எமது இணைந்த முயற்சிகளின் முக்கியமான பங்கு வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

2022 ஜுன் மாதம் முதல் WFP இன் அவசர செயற்பாடுகளினூடாக ஜப்பான் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான தொகையை ஜப்பான் பங்களிப்பு செய்துள்ளது. இதுவரையில், இந்த மனிதநேய உதவித் திட்டத்தினூடாக, 2 மில்லியனுக்கு அதிகமான பயன்பெறுநர்களை சென்றடைந்துள்ளதுடன், இதில் கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் குழந்தைபேறை எதிர்பார்த்துள்ள தாய்மார் அல்லது பாலூட்டும் தாய்மார் ஆகியோரும் அடங்கியுள்ளனர்.