சிரோமி சூசைபிள்ளை மற்றும் தர்ஷன் முனிதாஸ ஆகியோருக்கு "The Order of the Rising Sun" கௌரவிப்பு வழங்கப்படுகின்றமை தொடர்பான அறிவிப்பு

2023/11/3
ஜப்பானிய அரசாங்கத்தினால் “The Order of the Rising Sun” கௌரவிப்பைப் பெறுவோரின் விவரங்கள் 2023 நவம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டின் கௌரவிப்பு நிரலில், இலங்கையைச் சேர்ந்த இரு நபர்களும், இலங்கை – ஜப்பானிடையேயான உறவை கட்டியெழுப்புவதற்கு வழங்கியிருந்த பங்களிப்புக்காக கௌரவிக்கப்பட்டனர். அவர்களின் விவரங்கள் வருமாறு,


சிரோமி சூரைபிள்ளை
The Order of the Rising Sun, Gold and Silver Rays
Ikebana இன்டர்நஷனல் இலங்கை பிரிவு தலைவர்
இலங்கையில் Ikebana ஊக்குவிப்புக்கு பங்களிப்பு வழங்கியிருந்ததுடன், ஜப்பான் மற்றும் இலங்கையிடையே நட்புறவை கட்டியெழுப்பவும் பங்காற்றியிருந்தார்.


தர்ஷன் முனிதாஸ
The Order of the Rising Sun, Gold and Silver Rays
"Nihonbashi" உணவகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும், உரிமையாளரும்
இலங்கையில் ஜப்பானிய உணவு வகைகளை பிரபல்யப்படுத்த பங்களிப்பு வழங்கியிருந்தார்.

இலங்கையில் ஜப்பானிய ikebana கலாசாரத்தை நீண்ட காலமாக பின்பற்றுபவராக சிரோமி சூசைபிள்ளை திகழ்கின்றார். 1983 ஆம் ஆண்டில் Sogetsu-பாணியிலமைந்த ikebana பயணத்தை ஆரம்பித்திருந்த சிரோமியின் ஈடுபாடு மற்றும் நிபுணத்துவம் ஆகியன அடுத்த தலைமுறைக்கு ikebana அம்சங்களை கொண்டு சேர்ப்பது வரை தொடர்ந்திருந்தது.  2011 ஆம் ஆண்டு அறிவுறுத்தல் வழங்குபவராக சான்றிதழ் பெற்ற இவர், இலங்கையில் ikebana பிரபல்யப்படுத்தலில் முக்கிய பங்காற்றியிருந்தார். பலருக்கு அதன் உள்ளம்சங்களையும் நுட்பங்களையும் பயிற்றுவித்திருந்தார். உலகளாவிய ரீதியில் பல ikebana கண்காட்சிகளில் சிரோமி பங்கேற்று, கலை தொடர்பான திறமைகளை வெளிப்படுத்தி, ikebana இன் சர்வதேச வரவேற்பை ஊக்குவித்திருந்தார்.
 
கற்பிப்பதற்கு அப்பால், பரந்தளவு இலங்கை பொது மக்கள் மத்தியில் ikebana வை அறிமுகம் செய்வதற்கான தனது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார். சிங்கள தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்களில் நேர்காணல்கள் மற்றும் ஆக்கங்களினூடாக, அழகிய கலை தொடர்பான விளக்கங்களை பகிர்ந்திருந்தார்.
 
பாரம்பரிய ஜப்பானிய ikebana வை தமது பிரத்தியேக அம்சங்களுடன் சிரோமியின் தொடர்ந்திருந்தார். கவனமாக தெரிந்தெடுத்த பூக்கள் முதல் பூ வாளிகள் வரை இலங்கையின் மலர்ச் செய்கையை உள்வாங்கி, ikebana பாணியில் முன்னெடுத்திருந்தார். இவற்றுக்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் பெருமளவு வரவேற்புகள் காணப்பட்டன.
 
சமையல்கலை உலகில் தர்ஷன் முனிதாஸ புகழ்பெற்றுள்ளார். இலங்கையில் ஜப்பானிய உணவு வகைகளை தயாரித்து வழங்குகின்றமைக்காக பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். 1995 ஆம் ஆண்டு "Nihonbashi"உணவகத்தை நிறுவியிருந்ததைத் தொடர்ந்து, இலங்கையில் ஜப்பானிய உணவு வகைகளை அறிமுகம் செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றார். உயர் தரம் வாய்ந்த ஜப்பானிய மூலப் பொருட்களை தெரிவு செய்வது முதல், பாரம்பரிய ஜப்பானிய உணவு தயாரிப்பு முறைகளை பின்பற்றுவது வரையில், விரும்பிகளுக்கு உணவு தயாரிப்பு முறையை முனிதாஸ செம்மைப்படுத்தி, ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான கலாசார பரிமாற்றத்துக்கும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.
 
ஜப்பானிய உணவு வகைகளையும், உணவுப் பழக்கங்களையும் உலகளாவிய ரீதியில் பிரபல்யப்படுத்தும் முயற்சிக்கான அடையாளமாக, ஜப்பானிய அரசாங்கத்தினால் 2013ஆம் ஆண்டுக்கான ஜப்பானிய தூதுவரின் விசேட கௌரவிப்பு முனிதாஸவுக்கு வழங்கப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டில் ஜப்பானிய உணவை வெளிநாட்டில் பிரபல்யப்படுத்துவதற்கான எட்டாவது அமைச்சரின் விருதுகளிலும் கௌரவிக்கப்பட்டிருந்தார். மேலும், 2021 ஆம் ஆண்டில் ஜப்பானிய உணவு வகைகளின் நலன்விரும்பி தூதுவராகவும், ஜப்பானிய விவசாய, வனாந்தர மற்றும் மீன்பிடித்துறை அமைச்சரினால் முனிதாஸ நியமிக்கப்பட்டிருந்தார்.
 
உணவு தயாரிப்பு முறைகளுக்கு அப்பால், கலாசார பரிமாற்றங்களுக்கான அர்ப்பணிப்பினூடாக, இலங்கை-ஜப்பானிய உறவை கட்டியெழுப்புவதற்கு முனிதாஸ பெருமளவில் பங்களிப்பு வழங்கியிருந்தார். இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் கட்டியெழுப்புவதற்கு இது உதவியாக அமைந்திருந்தது.
 
சூசைப்பிள்ளை மற்றும் முனிதாஸ ஆகிய இருவருக்கும் ஜப்பானிய தூதரகம் நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் கட்டியெழுப்புவதற்கு இவர்களின் செயற்பாடுகள் பங்களிப்பு வழங்கும் எனவும் எதிர்பார்க்கின்றது.