ஜப்பான் 2 நன்கொடை உதவித் திட்டங்களை கையளிப்பு: யென் 200 மில்.-நன்கொடை உதவியினூடாக வடக்கு-கிழக்கு கடற்றொழில் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், யென் 160 மில். நன்கொடை உதவியினூடாக டொப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பை நிறுவவும் நடவடிக்கை
2023/11/13
இலங்கையில் இரண்டு செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜப்பானிய மானிய நன்கொடைகளை வழங்கி வைப்பதற்கான உடன்படிக்கையில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும் நிதி, பொருளாதார உறுதிப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர் கே.எம்.எம்.சிறிவர்தன ஆகியோர் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வு 2023 நவம்பர் 22ஆம் திகதி நடைபெற்றது. முதல் நன்கொடையின் பெறுமதி 200 மில்லியன் ஜப்பானிய யென்களாக அமைந்திருப்பதுடன், இதனூடாக வடக்கு கிழக்கு கடற்றொழில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டாம் நன்கொடைத் திட்டத்தின் பெறுமதி 160 மில்லியன் ஜப்பானிய யென்களாக அமைந்திருப்பதுடன், இந்த நன்கொடையினூடாக டொப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பு நிறுவுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.



ரூ. 435 மில்லியன் நன்கொடையினூடாக இலங்கை கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனத்துக்கு ஐஸ் உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் டிஜிட்டல் தராசுகள் போன்றவற்றை பெற்றுக் கொள்ள உதவியாக அமையும். அத்துடன், இலங்கை தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு மேம்படுத்தப்பட்ட மீன்பிடி வலைகள் கொள்வனவுக்கும் உதவியாக அமைவதுடன், கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்துக்கு அதி குளிரூட்டிகள் மற்றும் அதி குளிரூட்டிகளைக் கொண்ட டிராக்டர்கள் ஆகியவற்றை கொள்வனவு செய்யவும் உதவும். இந்த முதலீட்டினூடாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த கடற்றொழிலுக்கு அவசியமான அதிகுளிரூட்டல் வசதிகள் மற்றும் நவீன சாதனங்களை விநியோகித்தல், கடற்றொழில் உற்பத்தியின் பெறுமதியை அதிகரித்தல் மற்றும் கடற்றொழில் சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் போன்றன மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கையின் குறுங்கால வானிலை முன்னறிப்பு ஆற்றல்களை மேம்படுத்தும் முயற்சிகள் மற்றும் காலநிலை தாக்கங்களினால் ஏற்படும் தாக்கங்களை தணிக்கும் வகையில், ஜப்பானிய அரசாங்கத்தினால் 2017 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் திகதி முதல் டொப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பை நிறுவுவதற்கான ஆதரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்ட வண்ணமுள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிநிலை காரணமாக, இந்தத் திட்டத்துக்காக மேலதிக உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான மழைவீழ்ச்சி மற்றும் வறட்சி போன்ற காலநிலையுடன் தொடர்புடைய தாக்கங்கள் இலங்கையில் அதிகரித்து வரும் நிலையில், மேலதிகமாக வழங்கப்பட்டுள்ள உதவித் தொகையினூடாக, டொப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பை நிறுவக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனூடாக, வானிலைசார் இடர்களை கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகம் இரு நாடுகளுக்குமிடையே தொடர்ச்சியான ஆதரவை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதுடன், பகிரப்பட்ட சவால்கள் தொடர்பில் கவனம் செலுத்தவும், மீட்சியுடனான எதிர்காலத்தை கட்டியெழுப்பவும் எதிர்பார்க்கின்றது.
இலங்கையிலுள்ள ஜப்பானிய தூதரகம் இரு நாடுகளுக்குமிடையே தொடர்ச்சியான ஆதரவை கட்டியெழுப்ப எதிர்பார்ப்பதுடன், பகிரப்பட்ட சவால்கள் தொடர்பில் கவனம் செலுத்தவும், மீட்சியுடனான எதிர்காலத்தை கட்டியெழுப்பவும் எதிர்பார்க்கின்றது.