வெற்றிகரமான கைகோர்ப்பினூடாக விறுவிறுப்பான Bon Odori Festival 2023 இலங்கையில் முன்னெடுப்பு
2023/11/13

தேசிய இளைஞர் சேவைகள் பேரவை (NYSC), ஜப்பானிய கூட்டொருமை சம்மேளனம் (JSA) மற்றும் ஜப்பானிய தூதரகம் ஆகியன இணைந்து Bon Odori Festival 2023 கலாசார நிகழ்வை மஹாரகமவிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் பேரவை வளாகத்தில் முன்னெடுத்திருந்தன.

மூதாதைய மெய்பொருள்களுக்கு பிரியாவிடை வழங்கி புதிய அம்சங்களை வரவேற்கும் ஜப்பானிய பாரம்பரியத்துக்கமைவான இந்த Bon Odori நிகழ்வு ஜப்பானிய கலாசார பாரம்பரியத்தில் முக்கிய அங்கமாக உள்ளது. இந்த ஆண்டின் நிகழ்வு பெருமளவு கலாசார செயற்பாட்டு அம்சங்களை காட்சிப்படுத்தியிருந்ததுடன், ஜப்பான் மற்றும் இலங்கையின் பாரம்பரிய விடயங்களை வெளிக் கொண்டுவருவதாக அமைந்திருந்தது.

வைபவத்தின் முக்கிய அங்கமாக, Bon Odori நாட்டியம் அமைந்திருந்தது. கொழும்பிலுள்ள ஜப்பானிய பாடசாலை மற்றும் Lanka Nippon BizTech Institute (LNBTI) ஆகியவற்றின் மாணவர்களால் புகழ்பெற்ற Bon Odori பாடல்களான Tokyo Ondo மற்றும் Tanko Bushi ஆகியவற்றுக்காக இந்த நாட்டிய நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. பாரம்பரிய டிரம்ஸ் (Wadaiko) இசையில், ஜப்பானிய பாடசாலை மாணவர்களின் (Yosakoi Soran) ஜப்பானிய நடனம் மற்றும் Wadaiko நாட்டியம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் பேரவையின் மாணவர்களின் கராதே திறமைகள் போன்றன இந்த கலாசார நிகழ்வுக்கு மேலும் வனப்பை சேர்த்திருந்தன.

இந்த நிகழ்வில் முக்கிய விருந்தினர்களான இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, தேசிய இளைஞர் சேவைகள் பேரவையின் தவிசாளர் பசிந்து குணரட்ன மற்றும் JSA இன் தலைவர் ஹொட்டா மிகினாகா ஆகியோர் கலந்து கொண்டனர். வைபவத்துக்கு அவர்களின் பிரசன்னம் பெறுமதியையும் கீர்த்தியையும் ஏற்படுத்தியிருந்ததுடன், இலங்கை மற்றும் ஜப்பானிடையே உறுதியான கலாசார பிணைப்புகளையும் ஏற்படுத்தியிருந்தது.

மோசமான வானிலையின் மத்தியிலும், இலங்கை மற்றும் ஜப்பானிய பிரஜைகள் பெருமளவில் இந்த ஆண்டின் Bon Odori நிகழ்வில் கலந்து கொண்டனர். முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழ்வில் பங்கேற்றவர்களில் பெருமளவான அதிகரிப்பு காணப்பட்டது. பங்கேற்றிருந்தவர்கள் மகிழ்ச்சிகரமான சூழலில் தம்மை ஆழ்த்தியிருந்ததுடன், நடனங்களில் பங்கேற்று, கைதட்டி ஆரவாரம் செய்திருந்தனர். Nihonbashi, Ginza Hohsen, Kuuraku, The Sushi Bar Samurai, Shikisen, Yamato, NYSC cooking class மற்றும் பல இதர இலங்கை உணவகங்களின் உணவு வகைகளையும் சுவைத்து மகிழ்ந்தனர்.

Bon Odori Festival 2023 நிகழ்வு வெற்றிகரமான முன்னெடுக்கப்பட்டிருந்ததனூடாக, இலங்கை மற்றும் ஜப்பானிடையிலான உறுதியான கலாசார பரிமாற்றத்துக்கு சான்றாக அமைந்திருந்தது. இதனூடாக இரு நாடுகளுக்குமிடையிலான பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் வரவேற்பு ஆகியன மேம்படுத்தப்பட்டிருந்தன. நிகழ்வை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு ஆதரவளித்திருந்த சகல பங்குபற்றுநர்கள், அனுசரணையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்தனர்.