ஜப்பானில் பணியாற்றுவதற்கான புதிய வாய்ப்பு விமான நிலைய கள கையாளல் திறன் காண் பரீட்சை 2024 மார்ச் மாதத்தில் முன்னெடுக்கப்படும்
2023/12/8
ஜப்பானில் வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில், விமான நிலைய கள கையாளல் திறன் காண் பரீட்சையை 2024 மார்ச் மாதம் இலங்கையின் திறன் படைத்த ஊழியர்களுக்காக முன்னெடுக்கவுள்ளதாக ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட தாதியியல் பராமரிப்பு, உணவு சேவை மற்றும் விவசாயம் போன்ற பிரிவுகளில் கடந்த ஆண்டு முதல் திறன் காண் பரீட்சைகள் முன்னெடுக்கப்படுவதுடன், நிர்மாணத்துறையில் திறன் காண் பரீட்சைத் தெரிவு அண்மையில் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்த புதிய அறிமுகத்துடன், இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு ஜப்பானில் ஐந்து பிரிவுகளில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை ஜப்பான் ஏற்படுத்தியுள்ளது.
பதிவு தொடர்பான தகவல், 2024 ஜனவரி மாதம் இந்தப் பரீட்சையை முன்னெடுக்கும் ஜப்பான் வான்வழிப்போக்குவரத்து பொறியியலாளர் சங்கத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றப்படும்.
https://exam.jaea.or.jp/
எழுத்துமூல மற்றும் பிரயோக பரீட்சைகளுக்கான சில மாதிரி வினாக்கள் மற்றும் பாடப் புத்தகத்தை இங்கு காணலாம்.
https://exam.jaea.or.jp/?page_id=356#section1
இந்த புதிய வாய்ப்பை பயன்படுத்தி ஜப்பானில் தொழில்புரிவதற்காக இலங்கையின் திறமையான பலர் முன்வருவார்கள் என ஜப்பானிய தூதரகம் எதிர்பார்க்கின்றது. அதனூடாக ஜப்பானிய விமான போக்குவரத்து சேவைகள் துறையில் பங்களிப்பு வழங்குவது மாத்திரமன்றி, இலங்கையின் எதிர்கால விருத்திக்கும் பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும். இலங்கையின் விருத்திக்கு அவசியமான ஆதரவையும் ஒழுங்கிணைப்யையும் ஜப்பானிய தூதரகம் தொடர்ந்து வழங்கும் என்பதுடன், இலங்கையுடன் நீண்ட காலமாக பேணும் நட்பை மேம்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.