ஜப்பானில் பணியாற்றுவதற்கான புதிய வாய்ப்பு குறிப்பிடப்பட்ட திறன்படைத்த பணியாளர்களுக்கான விமானநிலைய கள கையாளல் திறன் காண் பரீட்சை 2024 மார்ச் 10 ஆம் திகதி நடைபெறும்

2024/1/17
விமான நிலைய கள கையாளல் திறன் காண் பரீட்சை 2024 மார்ச் மாதம் 10 ஆம் திகதி, கொழும்பு பல்கலைக்கழகத்தின் – பட்டப்படிப்பு பீடத்தில் (பட்டப்படிப்பு பீடம், 35/30 பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தை, கொழும்பு 7) நடைபெறும் என இலங்கைக்கான ஜப்பானிய தூதரகம் அறிவித்துள்ளது. ஜப்பானில் திறன் படைத்த பணியாளர்களாக பணியாற்றுவதற்கு இந்த திறன் காண் பரீட்சை வழிகோலுவதாக அமைந்திருக்கும்.

இந்தப் பரீட்சையில் தோற்றுவதற்கான விண்ணப்பங்களை பெப்ரவரி 9 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும். தொடரும் பக்கத்தில் இது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ளவும். விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்வது, கிடைக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கையை பூர்த்தி செய்ததும் நிறைவு செய்யப்படும்.
https://exam.jaea.or.jp/?p=10127


எழுத்துமூல மற்றும் பிரயோக பரீட்சை தொடர்பில் புத்தகங்கள் மற்றும் மாதிரி வினாக்களை பார்வையிட.
https://exam.jaea.or.jp/?page_id=356#section1


ஜப்பானில் பணியாற்றுவதற்கு இந்த புதிய வாய்ப்பின் பலனை திறன் படைத்த பல இலங்கையர்கள் பெற்றுக் கொள்வார்கள் என ஜப்பானிய தூதரகம் எதிர்பார்ப்பதுடன், ஜப்பானின் ஆகாய விமானத் துறைக்கு பங்களிப்பு வழங்குவதற்கு மாத்திரமன்றி, இலங்கையின் எதிர்கால விருத்திக்கு பங்களிப்பு வழங்கக்கூடிய வகையில் தமது திறன்களை கட்டியெழுப்பிக் கொள்ள முடியும். இலங்கையுடன் நீண்ட காலமாக பேணி வரும் நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையின் அபிவிருத்திக்கு அவசியமான ஆதரவை ஜப்பானிய தூதரகம் வழங்கும்.