திருமதி. ஷிரோமி சூசைபிள்ளைக்கு ஜப்பானின் உயர் கௌரவம்

2024/3/13

Ikebana இன்டர்நஷனல் ஸ்ரீ லங்கா பிரிவு 262 இன் தலைவியான திருமதி. ஷிரோமி சூசைபிள்ளைக்கு ஜப்பானின் உயர் கௌரவிப்பான "Order of the Rising Sun, Gold and Silver Rays" என்பதை இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மார்ச் 12ஆம் திகதி வழங்கியிருந்தார். இலங்கையில் ஜப்பானிய Ikebana கலாசாரத்தை ஊக்குவிப்பதில் இவர் ஆற்றும் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த உயர் கௌரவிப்பு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.


Ikebana இன்டர்நஷனல் ஸ்ரீ லங்கா பிரிவு 262 இன் தற்போதைய தலைவியான திருமதி. ஷிரோமி சூசைபிள்ளை, தமது பயணத்தை 1983 ஆம் ஆண்டு Sogetsu School of Ikebana இல் ஆரம்பித்தார்.  2001 ஆம் ஆண்டு, இவர் இலங்கை Shi-en Ikebana and Floral Art Society உடன் இணைந்து, தலைமைப் பதவி அடங்கலாக பல்வேறு பதவிகளை வகித்திருந்தார். 2007 ஆம் ஆண்டில், இலங்கை Shi-en Ikebana and Floral Art Society இனால் Ikebana இன்டர்நஷனல் ஸ்ரீ லங்கா பிரிவு 262 ஸ்தாபிக்கப்பட்டதுடன், இந்த பிரிவை நிறுவுவதில் திருமதி சூசைப்பிள்ளை முக்கிய பங்காற்றியிருந்தார்.


இலங்கையில் ஜப்பானிய Ikebana கலாசாரத்தை ஊக்குவிப்பதிலும், இலங்கையர்களுக்கு Ikebana நுட்பத்தை ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக கற்பிப்பதிலும் திருமதி. சூசைப்பிள்ளை ஆற்றியிருந்த முயற்சிகளுக்கு தூதுவர் மிசுகொஷி தமது பாராட்டுகளை தெரிவித்தார். இவர் சர்வதேச Ikebana மாநாடுகளில் பங்கேற்று, கண்காட்சிகள் மற்றும் விளக்கமளிப்புகள் போன்றவற்றில் தமது பணிகளை இவர் வெளிப்படுத்துகின்றமையால், அவர்களின் அர்ப்பணிப்பு நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை தூதுவர் மிசுகொஷி குறிப்பிட்டார்.


"The Order of the Rising Sun” என்பது ஜப்பானுடன் நட்பான உறவை கட்டியெழுப்புவதில் வெளிநாட்டு பிரஜைகள் ஆற்றும் பங்களிப்பை கௌரவித்து ஜப்பானின் முடியரசரினால் வழங்கப்படும் உயர் கௌரவிப்பாக அமைந்துள்ளது.
 
இந்த பெருமைக்குரிய நிகழ்வினூடாக, ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான பரஸ்பர உறவு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.