IOM, ILO, மற்றும் ஜப்பான் அரசாங்கம் ஆகியன இணைந்து பாதுகாப்பான மற்றும் முறையான புலம்பெயர்வினை ஊக்குவிப்பதற்கும் வெளிநாடு செல்ல விரும்புவோர் மற்றும் நாடு திரும்புவதற்கு ஆர்வமுள்ள புலம்பெயர்ந்தோர் மற்றும் மனித விற்பனையினால் பாதிக்கப்பட்டவர்களை மீளிணைப்பதற்கும் அவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும் உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளன.
2024/3/20
கொழும்பு, இலங்கை ஜப்பான் அரசாங்கத்தின் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன், புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM), மற்றும் சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILO) ஆகியவை 12 மாதகால "UPLIFT" கருத்திட்டத்தைத் தொடங்கியது. இந்த முன்னெடுப்பானது நாடு திரும்பியவர்கள், நாடு திரும்புவதற்கு ஆர்வமுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் மனித விற்பனையினால் பாதிக்கப்பட்டவர்களின் பேண்தகு சமூகப் பொருளாதார மீளிணைவுக்கும் அவர்களின் திறன்களையும் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும். இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கு IOM, ILO மற்றும் ஜப்பான் ஆகியவற்றால் முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தின் தொடர்ச்சியான முன்னெடுப்பாகவே இக்கருத்திட்டம் அமைகின்றது.
சமூக-பொருளாதார சூழமைவில் ஏற்பட்ட சடுதியான மாற்றங்கள் புலம்பெயர் ஊழியர்கள் முறையற்ற புலம்பெயர்வினை நாடுதல் மற்றும் மனித விற்பனைக்கு உள்ளாவதற்கான பாதிப்பு நிலையையும் அதிகப்படுத்தியுள்ளன. பாதுகாப்பான புலம்பெயர்வு வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமையும் தற்போதுள்ள தேசிய தகைமைசார் வரையறைகளும் இவ்விடயத்திற்கு மேலும் பங்களித்துள்ளன. மேலும், ஆர்வமுள்ள பல புலம்பெயர்வாளர்கள் மற்றும் நாடு திரும்பிய புலம்பெயர்ந்த ஊழியர்கள் திறன்கள் மற்றும் தகைமை சார்ந்த சவால்களை எதிர்கொள்வதுடன் அது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கண்ணியமான தொழில்வாய்ப்புகளைப் பெறுவதில் தடையாக காணப்படுகின்றது. இந்தப் பின்னணியில் முறையற்ற புலம்பெயர்வு மற்றும் மனித விற்பனை சார்ந்த இடர் நிலையை குறைத்தல். திறன்களை பெற்றுக்கொள்ளுதல் மற்றும் அவற்றுக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளுதல், பாதுகாப்பான மற்றும் முறையான புலம்பெயர்வினை நோக்கியதாக நாடு திரும்பியவர்களை பேண்தகு முறையில் மீளிணைத்தல் போன்ற விடயங்களில் அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் முன்னெடுப்புகளுக்கு உதவி வழங்குவதற்கான ஒரு பெரும் தேவை எழுந்துள்ளது.
UPLIFT கருத்திட்டமானது நான்கு முக்கிய விளைவுகளைக் கொண்டுள்ளது: (1) பேண்தகு தொழில்முயற்சிகள் மற்றும்/அல்லது மீண்டு வரும் ஆற்றலுடைய வாழ்வாதார வாய்ப்புகளுக்கான மேம்படுத்தப்பட்ட அணுகல் மூலம் நாடு திரும்பியவர்கள் மற்றும் பிற கிராமப்புற சமுதாயங்களின் பாதிப்புகளைத் தணித்தல். (2)பாதுகாப்பான மற்றும் முறையான புலம்பெயர்வு, தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் கருவிகள்/உட்கட்டமைப்பு தொடர்பான தகவல்களின் மூலம் முறையற்ற புலம்பெயர்வு மற்றும் மனித விற்பனை சார்ந்த இடர் நிலைகளை குறைத்தல் (3) இளைஞர்கள் உட்பட பெண்கள் மற்றும் ஆண்களின் வேலைவாய்ப்புக்கான அணுகலை மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டு இடையீடுகள் மூலம் (உள்நாட்டிலும் மற்றும் வெளிநாடுகளிலும் ) அதிகரித்தல். (4.) பயனுறுதிமிக்க கொள்கை உருவாக்கம் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளுதல் ஆகிய விடயங்களுக்கு ஆதார அடிப்படையிலான தரவுகளை வலுப்படுத்துதல்.
இக் கருத்திட்டமானது தொழில் வாய்ப்புக்கான புலம்பெயர்வு தொடர்பிலான இலங்கையின் தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம் (2023-2027) மற்றும் மனித விற்பனையை கண்காணித்து எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மூலோபாய செயல் திட்டம் (2021 - 2025) போன்ற இலங்கை அரசாங்கத்தின் கொள்கை முன்னுரிமைகளுடன் இசைந்தொழுகுகின்றன.
"UPLIFT" கருத்திட்டம் 20 மார்ச் 2024ஆம் திகதி இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் துணைத் தலைவர் திரு. கட்சுகி கோட்டாரோ, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான IOM தலைமை அதிகாரி, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ILO வதிவிடப் பிரதிநிதி, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் செயலாளர், மேஜர் ஜென்ரல் குலதுங்க தேசிய புலனாய்வுப்பிரிவு தலைவர் பாதுகாப்பு அமைச்சு (தேசிய மனித விற்பனைக்கு எதிரான செயலணியின் பிரதிநிதி) மற்றும் பிற அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜப்பான் தூதரகத்தின் துணைத் தலைவர் திரு. கோட்டாரோ இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், "கோவிட் -19 பூகோலதொற்றின் திடீர் பரவலையடுத்து இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பிலும் மேம்பாட்டிலும் ஜப்பான் ஈடுபட்டு வருகிறது . அவர்கள் ஒவ்வொருவரும் வெளிநாடுகளில் இருந்தாலும் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சமூகத்திற்கு பங்களிக்கக்கூடிய ஒரு முக்கியமான சொத்தாகவும் செயற்பாட்டாளர்களாகவும் திகழ்கின்றனர். புலம்பெயர் ஊழியர்களினால் இந்நாட்டிற்கு அனுப்பிவைக்கப்படும் பணம் இலங்கைக்கு வருமானம் கிடைக்கும் மிகப்பெரிய மூலமாக இருக்கின்றதென கேள்வியுற்றேன். ஜப்பான் அவர்களை சட்டவிரோத மனித விற்பனையிலிருந்து பாதுகாப்பதற்காக பாதுகாப்பான புலம்பெயர்வுக்கு உதவியளிப்பதற்கு விரும்புகின்றது. இவ்விடயமானது திறமையான இலங்கையர்கள் தங்கள் திறமைகளைப் பயன்படுத்தி ஜப்பானில் செழித்தோங்கக்கூடிய வகையிலான எங்களது குறிப்பிட்ட பயிற்சிபெற்ற தொழிலாளர் நிகழ்ச்சித்திட்டத்தையும் ஊக்குவிக்கும் என நம்புகிறேன்.''
"இலங்கையில் வேலை வாய்ப்புக்கான புலம்பெயர்வுக்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம் மற்றும் மனித விற்பனையை கண்காணித்தல் மற்றும் எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய மூலோபாய செயல்திட்டம் ஆகியவற்றில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள தேசிய முன்னுரிமைகளுக்கு இக்கருத்திட்டம் இசைவுடையதாக அமைகின்றது. பாதுகாப்பான மற்றும் முறையான புலம்பெயர்வினை ஊக்குவிப்பதற்கும், நாடு திரும்பியவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நிலைகளில் இருக்கும் சமுதாயங்களுக்கு உதவியளிப்பதற்கும் ஆட்கடத்தல் மற்றும் விற்பனைக்கு ஆட்படும் மனிதர்களின் சார்ந்த இடர் நிலைகளைக் குறைப்பதற்குமான இந்த முக்கியமான முன்னெடுப்புக்கான ஜப்பான் அரசாங்கத்தின் காலோசிதமான உதவிக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்' என்று IOM அமைப்பின் இலங்கைக்கான தலைமை அதிகாரி திரு. சரத் தாஸ் குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சர்வதேச தொழிலாளர் ஸ்தாபதனத்தின் பணிப்பாளர் திருமதி ஜொனி சிம்ப்சன் இது பற்றி கூறுகையில்,"சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் மற்றும் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு ஆகியவற்றினால் செயல்படுத்தப்படும் UPLIFT
கருத்திட்டம் வேகமாக மாறிவரும் புலம்பெயர்வு சூழமைவுக்கு சிறந்த முறையில் பதிலளிப்பதற்கு இலங்கைக்கு உதவுகின்றது. தேசிய திறன் உட்கட்டமைப்பு மற்றும் ஆதார அடிப்படையிலான தரவு முறைமைகளை வலுப்படுத்தலானது மிகவும் பயனுறுதிமிக்க கொள்கை உருவாக்கத்திற்கு வழிவகுக்கும். முக்கிய துறைகளில் பயிற்சியானது வெளிநாடு செல்ல ஆர்வமுள்ள மற்றும் திரும்பி வரும் புலம்பெயர்ந்த ஊழியர்களை சரியான திறன்கள் மற்றும் தகவல்களைக் கொண்டு வலுப்படுத்துவதுடன் இது பயன்மிக்க வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பான புலம்பெயர்வு வழிமுறைகளை அணுகுவதற்கு வழியமைக்கின்றது. இலங்கை மக்களுக்கு மேலும் கண்ணியமான வேலைவாய்ப்புகளை பெற்றுத் தரும் விடயத்தில் ஐப்பான் அரசாங்கம் வழங்கும் தாராளமான உதவிகளை நாங்கள் பெரிதும் மெச்சுகின்றோம்."