ஜப்பானில் வேலை செய்ய ஒரு புதிய வாய்ப்பு

2024/4/3
குறிப்பிட்ட திறன் வாய்ந்த தொழிலாளர்களுக்கான தங்கு தங்குமிட வசதி தொழில்துறை திறன் தேர்வு மே 2024 இல் தொடங்குகிறது
 
குறிப்பிட்ட திறமையான பணியாளர்களாக ஜப்பானில் வேலை தேடுபவர்களுக்கு தங்குமிட தொழில் துறையில் புதிய திறன் பரீட்சை 2024 மே மாதம் இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் என்பதை ஜப்பான் தூதரகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
 
2022 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள தாதி பராமரிப்பு, உணவு சேவை மற்றும் விவசாயம் ஆகியவற்றில் தற்போதுள்ள திறன் பரீட்சைகள் சமீபத்தில் சேர்க்கப்பட்ட கட்டுமானம் மற்றும் விமான நிலைய தரை கையாளுதல் ஆகியவற்றுடன் தங்குமிட தொழில்துறையையும் சேர்த்து இலங்கையில் ஆறு துறைகளில் திறன் தேர்வுகள் நடத்தப்படும்.
 
சுற்றுலா இலங்கையின் முக்கிய தொழில்களில் ஒன்றாக இருப்பதால், 2024 இல் தொடங்கி ஐந்தாண்டு காலம். 23,000 என மதிப்பிடப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களை ஜப்பானி தங்குமிடத் சுற்றுலா துறை வரவேற்கும். ஜப்பானில் பணியாற்றுவதற்கான இந்த புதிய வாய்ப்பை பல திறமையான இலங்கையர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று ஜப்பான் தூதரகம் நம்புகிறது.
 
இலங்கையுடனான எமது நீண்டகால நட்பை மேலும் ஆழப்படுத்தி, இலங்கையின் அபிவிருத்திக்கு தேவையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் ஜப்பான் தூதரகம் தொடர்ந்து வழங்கும்.
 
இப்பதிவு பற்றிய மேலதிக தகவலுக்கும் தேர்வுகள் நடத்தும் ப்ரோமெட்ரிக்கின் பின்வரும் இணையதளத்தைப் பார்வையிடவும்.
https://www.prometric-jp.com/en/ssw/test_list/archives/12

எழுத்து மூல மற்றும் செயன்முறை தேர்வுகளின் மாதிரி வினாக்களைப் பார்க்க பின்வரும் இணையதளத்தைப் பார்வையிடவும்.
https://caipt.or.jp/tokuteiginou