இலங்கைக்கு சோனார் பொருத்தப்பட்ட கப்பல்களை வழங்குவதற்கான தீர்மானத்தை வெளிவிவகார அமைச்சர் கமிகாவா தெரிவித்தார்
2024/5/4
மே 4 ஆம் தேதி, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கௌரவ. கமிகாவா யொகொ அவர்கள் வெளிநாட்டு அமைச்சர்கள் சந்திப்பொன்றை இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ திரு.அலி சப்ரியுடன் நடத்தினார்.
“ஜப்பானும் இலங்கையும் கடலால் சூழப்பட்ட இரு தீவு நாடுகள்’ என்று அமைச்சர் கமிகாவா தெரிவித்தார்.
இது சம்பந்தமான, இலங்கையின் கோரிக்கையின் அடிப்படையில், கடல்சார் வரைபடத்தை தயாரிப்பதற்கு பயன்படுத்த ஜப்பான் சோனார் பொருத்தப்பட்ட கப்பலை வழங்குவதாக அமைச்சர் சப்ரியிடம் அமைச்சர் கமிகாவா தெரிவித்தார்.
அழகிய கடலால் சூழப்பட்ட இலங்கை, கூடிய விரைவில் பொருளாதார வளர்ச்சிக்கான பாதையில் தன்னைத் திரும்பக் கொண்டுவந்து, இந்தியப் பெருங்கடலின் மையமாக மேலும் முன்னேற்றம் அடையும் என்றும் அமைச்சர் கமிகாவா நம்பிக்கை தெரிவித்தார்.