வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் தனது ஆதரவை வழங்குகிறது
2024/6/27

ஜூன் 27, 2024 அன்று, ஜப்பானிய தூதுவர் திரு. MIZUKOSHI Hideaki, கண்ணிவெடி ஆலோசனைக் குழுவின் (MAG) இயக்குநர் திருமதி கிறிஸ்டி மெக்லென்ன் மற்றும் ஹாலோ அறக்கட்டளையின் திட்ட மேலாளர் திரு. பீட்டர் ஹக் ஸ்காட் பேக்கர் ஆகியோருடன் அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான உதவி (GGP)" திட்டத்தின் கீழ் இரண்டு கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்கான மானிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை வழங்குவதற்காக MAG மற்றும் HALO அறக்கட்டளையுடன் இணைந்து இந்த இரண்டு திட்டங்களுக்கும் மொத்தமாக 1,007,191 US$ (சுமார் ரூ. 301 மில்லியன்) ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நன்கொடை அளித்து வருகிறது, மேலும் ஜப்பானின் மொத்த உதவித் தொகை 45 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.

MAG மற்றும் HALOவின் இந்தத் திட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தம் 16,920 பயனாளிகளுக்கு மீள்குடியேற்றம் மற்றும் வாழ்வாதார உதவிக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி இலங்கைக்கான ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவிக் கொள்கையின் முன்னுரிமைப் பகுதிகளில் ஒன்றாகும்.
கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் முன்னணி நன்கொடையாளராக ஜப்பான் அரசாங்கம் தனது பங்களிப்பை ஆற்றி வருவதாகவும், கண்ணிவெடி பாதிப்பு இல்லாத இலங்கையை அடைவதற்குத் தேவையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கும் என்றும் தூதுவர் MIZUKOSHI உறுதியாக வலியுறுத்தினார்.

இந்த உதவித்தொகை வழங்குவது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
MAG இன் இயக்குநர் திருமதி கிறிஸ்டி மெக்லென்னன் இ கூறினார்;
“2002 இல் இலங்கை கண்ணிவெடிகளை அகற்றும் திட்டத்திற்கு ஆரம்பத்திலிருந்து, ஜப்பான் பெரும் நன்கொடை அளித்து வருகிறது. ஜப்பான் அரசாங்கத்தின் உதவியின் மூலம் மட்டும், MAG கிட்டத்தட்ட 3,500,000 m2நிலத்தை ஆபத்தில் இருந்து விடுவித்துள்ளது மேலும்17,000 க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் பல தசாப்தகால மோதல்களுக்குப் பிறகு நிலத்தில் எஞ்சியிருந்த மற்றும் நிலத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்த மற்ற வெடிபொருட்களையும் உயிரையும் மூட்டுகளையும் ஆபத்தில் ஆழ்த்தி அகற்றியது,. இந்த கூடுதல் நிதியுதவியுடன், MAG இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் மேலும் 205,128 m2 நிலத்தில் வெடிபொருட்களை அகற்றி, அங்கு வசிப்பவர்கள் மற்றும் மீள் திரும்பும் சமூகங்களுக்கு ஏற்படும் மரண அச்சுறுத்தல் மற்றும் காயங்களைக் குறைத்து 5,870 பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும். இத்திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்படும் நிலம் விவசாய வளர்ச்சிக்கும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும், இயற்கை வளங்களுக்கும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MAG 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடிகள் மற்றும் பிற வெடிகுண்டுகள் போன்றவற்றிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக பணியாற்றியுள்ளது, தற்போது நாட்டின் எட்டு மாவட்டங்களில் 1,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தியுள்ளது. ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து இந்த முக்கியமான, தொடர்ச்சியான ஆதரவைப் பெறுவதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம், மேலும் இலங்கை பாதுகாப்பாக சுதந்திரமாக மாறும் வரை எங்கள் கூட்டாண்மை தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம்.

HALO அறக்கட்டளையின் திட்ட மேலாளர் திரு. பீட்டர் ஹக் ஸ்காட் பேக்கர் கூறினார்;
HALO அறக்கட்டளையானது, இலங்கையில் HALO இன் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் அரசாங்கத்தின் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்புக்காக ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. எங்களின் நீண்டகால ஆதரவு நன்கொடையாளராக, 22 ஆண்டுகளுக்கும் மேலாக ஜப்பான் நமது மனிதாபிமான முயற்சிகளுக்கு இன்றியமையாததாக இருந்து வருகிறது, இது மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களை அச்சுறுத்தும் வெடிபொருள் எச்சங்களை அழிக்க எங்களுக்கு உதவுகிறது.
ஜப்பானிய நிதியுதவியானது 285,000-க்கும் மேற்பட்ட ஆள் எதிர்ப்புக் கண்ணிவெடிகளை பாதுகாப்பாக அழித்தது மற்றும் 7,551,569m2நிலங்களை கண்ணிவெடி அகற்றி விடுவித்தது, 280,000 க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பாக மீள்குடியேற்ற உதவுகிறது. ஜப்பானின் தாராளமான மற்றும் நிலையான நிதி ஆதரவு நூற்றுக்கணக்கான உள்ளூர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நிலையான வருமானம் மற்றும் வாழ்வாதாரத்தை வழங்குகிறது. HALO அறக்கட்டளை மற்றும் மூன்று கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுக்கு ஜப்பான் அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவு, இலங்கையில் எஞ்சியுள்ள கண்ணிவெடி மற்றும் பிற வெடிபொருள் எச்சங்களை அகறற்றி ஆளணி எதிர்ப்பு கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தின் கடப்பாடுகளை அடைய இலங்கை அரசாங்கத்திற்கு உதவுவதில் முக்கியமானது.