JICA தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட முன்னோடி திட்டத்தின் ஒப்படைப்பு நிகழ்வு “மேல் மாகாண திண்ம்கழிவு மேலாண்மை திட்டத்தை உருவாக்குவதற்கான பெருந்திட்டம்"

2024/7/4

4 ஜூலை 2024 அன்று, மேன்மைக்குரிய இலங்கைக்கான ஜப்பானின் பதில் தூதுவர் திரு. கட்சுகி கொடாரோ, பத்தரமுல்லையிலுள்ள மேல் மாகாண சபை கட்டிட வளாகத்தில், “மேல் மாகாண திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உருவாக்கும் பெருந்திட்டம்” என்ற தொழில்நுட்ப ஒத்துழைப்பின் கீழ் நடத்தப்பட்ட JICA முன்னோடி திட்டத்தின் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
 
IMF உடனான கடன் மறுசீரமைப்பு போன்ற மட்டத்தில் மட்டுமன்றி, இலங்கைக்கு உதவும் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான இந்தத் திட்டம் போன்ற சிறிய மட்டத்திலும் ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு பல்வேறு வகையான ஆதரவை வழங்கி வருகிற்து என்று​​பதில் தூதுவர் கட்சுகி தெரிவித்தார். இலங்கை பிரஜைகள் இலங்கை அரசாங்கம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும். பொருளாதார நடவடிக்கைகளில் தவிர்க்க முடியாத கழிவு முகாமைத்துவ பிரச்சினைகளுக்கு இத்திட்டத்தின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளதை அவர் வரவேற்றுள்ளார்.


இந்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு மேல் மாகாணத்தில் கழிவு முகாமைத்துவ திட்டங்களை உருவாக்குவதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இச்செயற்திட்டத்தின் ஓர் அங்கமாக கரடியன இறுதி அகற்றல் தளத்தில் நிலப்பரப்பின் சுற்றாடல் சுமையை குறைக்கும் முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உரம் பரிசோதனை செய்வதற்கான டிராமல்கள் மற்றும் கழிவுகளை கொண்டு செல்வதற்கான டிராக்டர்கள் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன.
 
பொருளாதார வளர்ச்சி மற்றும் சனத்தொகை அதிகரிப்பு காரணமாக ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வரும் பொதுக் கழிவுகளை முறையற்ற கழிவுகளை அகற்றுவதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் திறந்த வெளியில் கொட்டுதல் போன்ற சவால்களை இலங்கை எதிர்கொள்கிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜப்பான் அரசாங்கம் 2002 ஆம் ஆண்டு முதல் JICA இன் தொழில்நுட்ப ஒத்துழைப்பு மூலம் இலங்கையில் கழிவு மேலாண்மை முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறது. குறிப்பாக, ஏப்ரல் 2017 இல் கொழும்பில் ஒரு இறுதி அகற்றல் தளத்தில் குவிந்த கழிவுகள் சரிந்து, 32 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 418 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பான் அரசாங்கம் அவசர நிவாரணப் பொருட்களை வழங்கியது மற்றும் சர்வதேச அவசர உதவி குழுக்களையும் கழிவு மேலாண்மை நிபுணர்களையும் அனுப்பியது.


2017 விபத்துக்குப் பின்னர் அனுப்பப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த தொழில்நுட்ப ஒத்துழைப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் மாஸ்டர் பிளானை நடைமுறைப்படுத்துவதன் மூலம், இலங்கையில் அதிக சனத்தொகையைக் கொண்ட மேல் மாகாணத்தின் சுகாதாரச் சூழலில் முன்னேற்றங்களை எதிர்பார்க்கிறோம். ஜப்பான் அரசாங்கம், JICA உடன் இணைந்து, இலங்கையில் குடிமக்களுக்கும் பநிலத்துக்கும் நட்பான கழிவு மேலாண்மை நடவடிக்கைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும்.