ஜப்பான்-இலங்கை உறவுகளில் பேஸ்பால் ஊடாக வழங்கிய சிறந்த பங்களிப்புகளுக்காக திரு. சுஜீவ விஜயநாயக்கவிற்கு தூதுவரின் பாராட்டு வழங்கப்பட்டது
2024/8/13

ஆசிய பேஸ்பால் சம்மேளனத்தின் பிரதி நடுவர் பணிப்பாளர் திரு.சுஜீவ விஜயநாயக்க அவர்கள் தூதுவரின் பாராட்டுக்களுடன் கௌரவிக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான ஜப்பான் தூதரகம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது. இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேதகு மிசுகொஷி ஹிடேகி MIZUKOSHI Hideaki, பேஸ்பால் விளையாட்டை ஊக்குவிப்பதில் தனது அயராத முயற்சிகள் மூலம் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்புறவை வளர்ப்பதில் திரு.விஜயநாயக்கவின் சிறந்த சேவையை அங்கீகரிக்கிறார்.

கொழும்பு ஆனந்தா கல்லூரியில் நடைபெற்ற பேஸ்பால் உபகரணம் வழங்கும் நிகழ்வில் இந்த பாராட்டு வழங்கப்பட்டது. திரு.விஜயநாயக்க தலைமையிலான இந்த முயற்சியானது, இலங்கை முழுவதும் உள்ள 95 அணிகளுக்கு ஜப்பானில் இருந்து 241 பேஸ்பால் மட்டைகள் மற்றும் 2400 பேஸ்பால்களை நன்கொடையாக வழங்கி, நாட்டின் விளையாட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது.
ஜப்பானில் மதிப்பிற்குரிய நடுவராகவும் மற்றும் இலங்கை பேஸ்பால் சமூகத்தின் முக்கிய நபராகவும் பேஸ்பால் விளையாட்டிற்கு திரு.விஜயநாயக்கவின் பங்களிப்புகள் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவரது தலைமைத்துவமும் அர்ப்பணிப்பும் விளையாட்டில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் இலங்கையில் புதிய தலைமுறை விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

ஜப்பான் தூதரகம் திரு. சுஜீவ விஜயநாயக்க அவர்களுக்கு இந்த தகுதியான அங்கீகாரத்தை வாழ்த்துவதோடு, பேஸ்பால் விளையாட்டை மேம்படுத்துவதற்கும் ஜப்பான்-இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதற்கும் அவரது பங்களிப்பை தொடர்ந்து எதிர்பார்க்கிறது.