தூதுவர் இசொமடாவின் வாழ்த்துச் செய்தி

2024/11/15
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அதிமேதகு அகியோ இசொமடா, நவம்பர் 14 அன்று நடைபெற்ற அமைதியான மற்றும் ஜனநாயக ரீதியிலான பாராளுமன்றத் தேர்தலுக்கு இலங்கை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஜனநாயக நடைமுறையில் இலங்கை மக்கள் தீவிரமாக ஈடுபடுவதை அவர் பாராட்டியதுடன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
 
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவு பல தசாப்தங்களாக வலுப்பெற்றுள்ளது என்பதை வரலாறு எடுத்துக்காட்டுகிறது. இலங்கையில் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்றற பாராளுமன்றத் தேர்தல் எமது இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய அத்தியாயத்தின் ஆரம்பமாக அமையும் என ஜப்பான் நம்பிக்கை கொண்டுள்ளது.
 
எமது நாடுகளிலும் உலகிலும் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் அடையவும், பரஸ்பர நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்தவும், எமது இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை வலுப்படுத்தவும், இலங்கை அரசாங்கம், புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களுடன் நெருக்கமாகச் செயற்பட ஜப்பான் எதிர்பார்த்துள்ளது.