UNFPA உம் ஜப்பானிய அரசாங்கமும் வட மாகாணத்தில் சுகாதார சேவைகளை வலுப்படுத்துகின்றன

2025/2/12

இலங்கையின் வட மாகாணத்தில் மகப்பேற்று ஆரோக்கியப் பராமரிப்புச் சேவைகளையும் பிள்ளைச் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளையும் மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) ஜப்பானிய அரசாங்கத்தின் தாராள உதவியுடன் ஒரு முக்கியமான முன்னெடுப்பினை மேற்கொண்டுள்ளது. சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புடன் பொறுப்பேற்கப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் மன்னார் மாவட்டங்களில் வாழும் கர்ப்பிணிகள் மற்றும் சிசுக்களின் சுகாதாரப் பரரமரிப்புச் சேவை விநியோகத்தினை மேம்படுத்தி, அவர்களுக்குத் தரமான பராமரிப்பினை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 

2025 ஜனவரி 12 அன்று, வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில், ஊர்காவற்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் (MOH) கிளினிக்கில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரான மேன்மை தங்கிய திரு. அகியோ இசோமடா அவர்களும் யுஎன்எப்பிஏ பிரதிநிதி திரு.குன்லே அடெனியி அவர்களும் 34,089,250.70 இலங்கை ரூபா பெறுமதியான. வட மாகாணத்தில் உள்ள 8 சுகாதார நிலையங்களைக் கையளித்தனர் என்பதுடன் இச்சுகாதார நிலையக் கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு, இவற்றுக்கு அவசியமான உபகரணங்கள் ஜப்பானின் நிதியுதவியுடன் யுஎன்எப்பிஏ இனால் வழங்கப்பட்டுள்ளன. இச்சுகாதார நிலையங்களாவன: வங்காலை பிரதேச வைத்தியசாலையிலுள்ள (மன்னார்) பிரசவ விடுதிகள், நானாட்டான் பிரதேச வைத்தியசாலை (மன்னார்), விடத்தல்தீவு பிரதேச வைத்தியசாலை (மன்னார்), மருதங்கேணியிலுள்ள (யாழ்ப்பாணம்) MOH கிளினிக், ஊர்காவற்துறையிலுள்ள (யாழ்ப்பாணம்) MOH மத்திய கிளினிக், சங்காணையிலுள்ள (யாழ்ப்பாணம்) MOH கிளினிக், ஆனைவிழுந்தான் கிரஞ்சி மற்றும் பரந்தனிலுள்ள (கிளிநொச்சி)கிராமோதய சுகாதார நிலையங்களிலுள்ள சுகாதாரக் கிளினிக்குகள் ஆகும். இந்த எட்டு நிலையங்களுக்கு மேலதிகமாக, ஜப்பானிய அரசாங்கமும் யுஎன்எப்பிஏயும் சங்காணையிலுள்ள (யாழ்ப்பாணம்) MOH கிளினிக்கினைப் புதுப்பித்து வருகின்றன.


இந்த முன்னெடுப்பின் பிரதான தாக்கங்களும் பிரசவ விடுதிகளில் பராமரிப்புத் தர மேம்பாடு, அத்தியாவசியமான சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்கான வலுப்படுத்தப்பட்ட அணுகல், மற்றும் வலுப்படுத்தப்பட்ட கிராமியச் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் ஆகியன உள்ளடங்குகின்றன. இந்த ஒன்பது சுகாதார நிலையங்களினதும் புதுப்பிப்பானது சேவைகள் முறையாகக் கிட்டாத பிரதேசங்களில் உள்ள சுகாதாரப் பராமரிப்பு உட்கட்டமைப்பினை வலுப்படுத்துவதை நோக்கிய அவசியமான முன்னெடுப்பினையே எடுத்துக்காட்டுகின்றது. ஒவ்வொரு மாதமும் 450 தாய்மார்களும் குழந்தைகளும் பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரச் சேவைகள் (SRH) பற்றிய தகவல்களினால் பயனடைவர் எனும் மதிப்பீட்டுடன், இந்த முன்னெடுப்பானது இலங்கையின் வட மாகாணத்தில் ஆரோக்கியமான கர்ப்பங்கள் மற்றும் பாதுகாப்பான பிரசவங்களை உறுதிப்படுத்துவதற்கான ஒரு படியாகும் என்றால் மிகையாகாது.


 
UNFPA. ஜப்பானிய அரசாங்கத்துடனான பங்காண்மையுடன், இலங்கையில், அனைவரையும் உள்ளடக்கி, சுகாதார முறைமைகளை வலுப்படுத்துவதற்கான, சகல பிரசைகளும் தரமான சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்கான அணுகலைக் கொண்டுள்ளனர் குறிப்பாக பிரசவ சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளுக்கான அணுகலைக் கொண்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான கடப்பாட்டினைத் தொடர்ந்து வரித்துக்கொண்டுள்ளது.