பேஸ்பால் உபகரணங்கள் நன்கொடை மூலம் ஜப்பான் இலங்கையுடனான விளையாட்டு உறவுகளை வலுப்படுத்துகிறது

2025/2/25

இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம், ஹொக்கைடோ பன்கியோ பல்கலைக்கழகத்தால் இலங்கை பேஸ்போல் (baseball) மென்பந்து சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பேஸ்போல் உபகரணங்களை ஒப்படைக்கும் விழாவை 2025 பிப்ரவரி 25 அன்று தூதரக மண்டபத்தில் நடத்தியது. இந்த முயற்சி ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான விளையாட்டு மற்றும் கலாச்சார உறவுகளை எடுத்துக்காட்டு வதுடன் மேலும் பேஸ்போல் விளையாட்டு மூலம் நட்பை மேலும் வளர்க்கிறது.
 
ஹொக்கைடோ பங்க்யோ பல்கலைக்கழகம், பல்கலைக்கழக பேஸ்போல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் சமூக உறுப்பினர்களின் தாராள பங்களிப்புகளுடன் நன்கொடையாக வழங்கப்பட்ட பேஸ்போல் உபகரணங்களைச் சேகரித்தது. இலங்கை தரப்பில், இந்த நன்கொடையை ஆசிய பேஸ்பால் கூட்டமைப்பின் துணை நடுவர் இயக்குநர் திரு. சுஜீவ விஜயநாயக்க, பேஸ்போல் (baseball) மென்பந்து சங்கத்துடன் இணைந்து ஒருங்கிணைத்தார்.


இந்த விழா, டாக்டர் தொஷிஹிரோ வடனாபே, தலைவர் ஹொக்கைடோ பங்க்யோ பல்கலைக்கழகம் உட்பட டாக்டர். ஹருமி ஆவோ, துணைத் தலைவர், ஹொக்கைடோ பங்க்யோ பல்கலைக்கழகம், இபரகியில் உள்ள இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவத் தூதர் திரு. சுனில் கமகே, இலங்கை பேஸ்போல் மென்பந்து சங்கத்தின் தலைவர் அசங்க செனவிரத்ன மற்றும் ஆசிய பேஸ்போல் கூட்டமைப்பின் துணை நடுவர் இயக்குநர் சுஜீவ விஜயநாயக்க ஆகிய மதிப்பிற்குரிய விருந்தினர்களின் வருகையால் சிறப்பிக்கப்பட்டது.


ஹொக்கைடோ பன்கியோ பல்கலைக்கழகத்தின் இந்த தாராளமான பங்களிப்பு, இலங்கையில் பேஸ்பால் வளர்ச்சியை ஆதரிப்பதையும், இளம் வீரர்களுக்கு சிறந்த உபகரணங்களை வழங்குவதையும், விளையாட்டில் அதிக பங்கேற்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையில் பேஸ்போல் பிரபலமடைந்து வருகிறது, மேலும் நாட்டில் அதன் விரிவாக்கத்தை ஆதரிப்பதில் ஜப்பான் தொடர்ந்து உறுதியாக உள்ளது.