வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் தனது ஆதரவை வழங்குகிறது
2025/5/30

2மே 30, 2025 அன்று, திரு. KAMOSHIDA Naoaki Chargé d' Affaires ad interim, கண்ணிவெடி ஆலோசனைக் குழு (MAG) மற்றும் ஹாலோ அறக்கட்டளையுடன் (Halo Trust) அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான உதவி (GGP)" திட்டத்தின் கீழ் இரண்டு கண்ணிவெடி அகற்றும் திட்டங்களுக்கான மானிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை வழங்குவதற்காக MAG மற்றும் HALO அறக்கட்டளையுடன் இணைந்து இந்த புதிய இரண்டு திட்டங்களுக்கும் மொத்தமாக 900,000 US$ (சுமார் ரூ. 270 மில்லியன்) ஜப்பான் அரசாங்கம் வழங்கியுள்ளது. 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நன்கொடை அளித்து வருகிறது, மேலும் ஜப்பானின் மொத்த உதவித் தொகை 47 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.
MAG மற்றும் HALOவின் இந்தத் திட்டங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தம் 13,000 பயனாளிகளுக்கு மீள்குடியேற்றம் மற்றும் மேம்பட்ட வாழ்வாதார உதவிக்கு பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு யுத்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி இலங்கைக்கான ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி முன்னுரிமைப் பகுதிகளில் ஒன்றாகும்.

இலங்கையில் அமைதியைக் கட்டியெழுப்புதல், மீள்குடியேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய ஒரு அடிப்படை படியாக கண்ணிவெடி அகற்றலை ஜப்பான் கருதுகிறது என்று திரு. KAMOSHIDA வலியுறுத்தினார். ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவிற்கான வலுவான உறுதிப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார், மேலும் 2027 ஆம் ஆண்டுக்குள் இலங்கை கண்ணிவெடி பாதிப்பு இல்லாத நாடாக மாறும் என்றும், இது நீடித்த அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு வழி வகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த உதவித்தொகை வழங்குவது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
MAG இன் இயக்குநர் ஜீனத் கரேவால் கூறினார்;
“இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் பொதுமக்களின் வாழ்க்கையில் கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் நில விடுவிப்பு நேரடி தாக்கங்களை ஏற்படுத்துகிறது. மாசுபட்ட நிலங்களை அகற்றுவது கிராமங்களில் விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு உதவுவதோடு கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகளின் அச்சுறுத்தலில் இருந்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இந்த முயற்சிகள் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகின்றன, செழிப்பு மற்றும் பாதுகாப்பான தேசத்தை நோக்கிய பாதையை அமைக்கின்றன.
ஜனவரி 2025 நிலவரப்படி, MAG மொத்தம் 100,930,005 m2நிலத்தை விடுவித்துள்ளது மற்றும் 2002 முதல் 103,467 க்கும் மேற்பட்ட வெடிக்கும் போர் எச்சங்களை அகற்றியுள்ளது. பல தசாப்தங்களாக ஆயுத மோதல்களால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆள் எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் பிற ஆபத்தான மாசுபாடுகளை அகற்றுவதற்கு ஜப்பான் தூதரகம் மற்றும் மக்கள் அளித்த தொடர்ச்சியான ஆதரவுக்கு MAG தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
“உயிர்களைக் காப்பாற்றுங்கள், எதிர்காலத்தைக் கட்டியெழுப்புங்கள்” என்ற எங்கள் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக, MAG தூதரகம் மற்றும் ஜப்பான் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறது, மேலும் கண்ணிவெடி இல்லாத இலங்கையை உருவாக்குவதற்கான எங்கள் இலக்கை அடைய அவர்களின் தொடர்ச்சியான ஆதரவையும் உதவியையும் எதிர்நோக்குகிறது.”

HALOவின் துணைத் திட்ட மேலாளர் ஹன்னா எலிசபெத் பிக்டன் கூறுகையில்;
“கடந்த 22 ஆண்டுகளில், ஜப்பான் HALOவின் மிகவும் நிலையான ஆதரவாளராக இருந்து வருகிறது. இக்காலத்தில், HALO கிட்டத்தட்ட 300,000 ஆள் எதிர்ப்பு கண்ணிவெடிகளைக் கண்டுபிடித்து அழித்துள்ளது மற்றும் முன்னர் மாசுபட்ட 120 ㎢ நிலத்தை விடுவித்துள்ளது. இது கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 150,300 நபர்களின் மீள்குடியேற்றத்திற்கு பங்களித்துள்ளது, நிலையான வாழ்வாதாரத்தை மீட்டெடுத்துள்ளது மற்றும் சமூக மறுகட்டமைப்பு மற்றும் நிலைப்படுத்தலை செயல்படுத்துகிறது. இது உள்ளூர் ஆண்களும் பெண்களும் மிகவும் மதிக்கப்படும் தொழிலில் பங்கேற்கவும், அவர்களின் குடும்பங்களுக்கு நிலையான வருமானத்தை வழங்கவும் உதவியுள்ளது.
ஜப்பானின் ஆதரவுடன், மீதமுள்ள மாசுபாட்டைக் கண்டறிந்து அகற்றுவதில் HALO செயல்பட்டு வருகிறது, அதே நேரத்தில் தேசிய கண்ணிவெடி நடவடிக்கை மையத்தை (NMAC) தேசிய நிறைவு செயல்முறையை செயல்படுத்துவதில் ஆதரிக்கிறது. கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுக்கு இந்த உதவி, இலங்கை அரசாங்கத்தை அதன் அனைத்து அறியப்பட்ட கண்ணிவெடி மற்றும் பிற வெடிக்கும் மாசுபாடுகளிலிருந்து நாட்டை விடுவிப்பதற்க்கும் அதன் ஆள் எதிர்ப்பு கண்ணிவெடி தடை ஒப்பந்தக் கடமையை நிறைவேற்றுவதற்க்கும் மிகவும் முக்கியமானது.”