“ஹபரண-வெயங்கொட மின்பரிமாற்ற திட்டம்” நிறைவடைந்தது

2025/9/4

செப்டம்பர் 3 ஆம் தேதி, இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசொமதா, புதிய ஹபரன கிரிட் துணை மின் நிலையத்தில் ஹபரன-வெயங்கொட மின்பரிமாற்ற திட்டத்தின் திறப்பு விழாவில், எரிசக்தி அமைச்சர் கௌரவ குமார ஜயகொடி, இலங்கை மின்சார வாரியத்தின் (CEB) பொது மேலாளர் திரு. வசந்த எதுசூரிய மற்றும் JICA இலங்கை அலுவலகத்தின் தலைமை பிரதிநிதி திரு. கென்ஜி குரோனுமா ஆகியோருடன் கலந்து கொண்டார்.
 
  

ஜப்பான் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட சுமார் 65 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த யென் கடன் திட்டம், ஹபரண மற்றும் வெயங்கொட டையே குறைந்த இழப்பு கொண்ட மின் இணைப்புகள் மற்றும் துணை மின்நிலையங்களை நிர்மாணிப்பதன் மூலம் மின் பரிமாற்ற திறனை வலுப்படுத்துதல், மின்சார விநியோகத்தின் நம்பகத்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் மின் பரிமாற்ற இழப்பைக் குறைத்தல் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடைநிறுத்தப்பட்ட பதினொரு (11) யென்-கடன் திட்டங்களின் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து, முடிக்கப்பட்டு இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்ட முதல் யென்-கடன் திட்டம் இது என்பதால் இந்தத் திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும்.
 
தனது கருத்துக்களில், தூதர் இசொமதா, கடந்த தசாப்தங்களாக இலங்கையின் மின்சாரத் துறையில் ஜப்பான் அளித்த உதவியை நினைவு கூர்ந்தார், மேலும் குறைந்த இழப்பு, பெரிய திறன் மற்றும் நீண்ட தூர பரிமாற்றம் உள்ளிட்ட இந்த திட்டத்தின் அம்சங்களை எடுத்துரைத்தார், இது பரிமாற்ற இழப்பைக் குறைப்பதன் மூலம் இலங்கை CO2 உமிழ்வைக் குறைக்க உதவுகிறது.
 
பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6 இன் கீழ் கூட்டு கடன் பொறிமுறை (JCM) மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிப்பதில் நடந்து வரும் இருதரப்பு ஒத்துழைப்பையும் அவர் குறிப்பிட்டார், இது இலங்கையில் முடிக்கப்பட்ட அல்லது நடந்து கொண்டிருக்கும் மூன்று சூரிய மின் திட்டங்களில் எடுத்துக்காட்டாகும். ஜப்பானில் இருந்து வரும் முதலீடுகள் உட்பட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகளை அழைப்பதன் முக்கியத்துவத்தை தூதர் இசொமதா வலியுறுத்தினார், ஊழலை ஒழித்தல், உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், வணிக சூழலை மேம்படுத்துதல் மற்றும் தெளிவான தொழில்துறை ஊக்குவிப்பு கொள்கையை உருவாக்குதல் ஆகியவை வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கான அத்தியாவசிய கூறுகளாகும்.


இலங்கையின் மின்சார அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாக இந்த திட்டம் இருப்பதாகவும், இது நிலைத்தன்மை, நம்பகத்தன்மை மற்றும் அதிக திறனை உறுதி செய்வதாகவும், சமீபத்திய காலங்களில் எதிர்கொள்ளப்பட்ட மின் தடைகளைத் தடுக்க உதவும் என்றும் எரிசக்தி அமைச்சர் கௌரவ திரு. குமார ஜயககொடி கூறினார். ஜப்பான் மக்களின் நீண்டகால நட்பு மற்றும் ஆதரவுக்கு அவர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், மேலும் எதிர்கால திட்டங்களில் ஜப்பானிய முதலீடுகளை இலங்கை எதிர்நோக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.