வட மாகாணத்தில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் தனது ஆதரவை வழங்குகிறது
2025/10/30

அக்டோபர் 30, 2025 அன்று, ஜப்பான் தூதர் அதிமேதகு திரு. அகியோ இசொமட்டா, “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் கண்ணிவெடி அகற்றும் திட்டத்திற்கான மானிய ஒப்பந்தத்தில் ஸ்கவிதா மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண திட்டத்தின் (SHARP) திட்ட மேலாளர் திரு. சரத் ஜெயவர்தனவுடன் கையெழுத்திட்டார்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மனிதாபிமான அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை ஆதரிப்பதற்காக, SHARP ஆல் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்திற்காக ஜப்பான் அரசு 477,185 அமெரிக்க டாலர்களை (அண்ணளவாக ரூ. 144 மில்லியன்) வழங்கியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் கீழ், 180,000 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான நிலம் கண்ணிவெடி இல்லாததாக மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் சுமார் 600 பேர் தங்கள் நிலங்களுக்குத் திரும்பவும், சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1,500 பேர் தங்கள் பொருளாதார நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும் முடியும். 2002 முதல் இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஜப்பான் ஒரு முக்கிய நன்கொடையாளராக இருந்து வருகிறது, மேலும் மொத்த உதவி 48 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமாகும்.

SHARP நிறுவனத்தின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத முயற்சிகளுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, ஜப்பானின் தொடர்ச்சியான உதவிக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய தூதர் ISOMATA, “கடந்த மாதம் அதிமேதகு ஜனாதிபதி திசாநாயக்கவின் ஜப்பான் விஜயத்தின் போது, இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளில் ஜப்பான் தொடர்ந்து அளித்து வரும் உதவிக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். இந்த உதவி தேசிய நல்லிணக்கத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், வடக்கு மற்றும் கிழக்கில் சமூக அதிகாரமளித்தல் மற்றும் மோதலுக்குப் பின்னரான வளர்ச்சியை ஆதரிப்பதாகவும் அங்கீகரித்தார். ஜனாதிபதி வழங்கிய இந்த அன்பான அங்கீகார வார்த்தைகளுக்கு ஜப்பான் நன்றி தெரிவிக்கிறது. டோக்கியோவில் இரு தலைவர்களுக்கும் இடையிலான உச்சிமாநாட்டில், வடக்கு மற்றும் கிழக்கில் மோதலால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொள்வதன் முக்கியத்துவத்தையும் இரு தரப்பினரும் உறுதிப்படுத்தினர். தேசிய நல்லிணக்கமும் சமூக-பொருளாதார வளர்ச்சியும் நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை மனதில் கொண்டு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சிக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது”.
இந்த மானிய உதவி பெறுவது குறித்து கருத்து தெரிவித்த SHARP இன் இயக்குநர் மற்றும் திட்ட மேலாளர் திரு. சரத் ஜெயவர்தன, இவ்வாறு கூறினார்.
“SHARP எங்கள் செயல்பாடுகளை எங்களால் முடிந்தவரை விடாமுயற்சியுடன், திறமையாக மற்றும் திறம்பட மேற்கொள்வோம். SHARP க்கு மற்றொரு வருடத்திற்கு நிதியுதவி அளித்து, நமது நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கான தொடர்ச்சியான அக்கறை மற்றும் உதவிக்காக, SHARP இன் அனைத்து உறுப்பினர்களின் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும், தூதர் Akio ISOMATA, அனைத்து GGP மற்றும் ஜப்பான் தூதரகத்தின் பிற ஊழியர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஜப்பான் தூதரகம் முன்னணியில் இருப்பதற்கும், நமது நாட்டு மக்களின் நல்வாழ்வுக்கான அவர்களின் தொடர்ச்சியான அக்கறை மற்றும் உதவிக்கும் எப்போதும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். SHARP இல் உள்ள நாங்கள் ஜப்பான் மக்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.”
