வெளியுறவு அமைச்சர் மொதேகியின் இரங்கல் செய்தி
2025/11/29
இலங்கையைத் தாக்கிய சூறாவளி வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியுள்ளது, இதன் விளைவாக பல விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் உட்பட சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களின் ஆன்மா சாந்தியடைய நான் பிரார்த்திக்கிறேன், மேலும் அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்கள் விரைவான மீட்சி பெற எனது மனமார்ந்த பிரார்த்தனைகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியுறவு அமைச்சர் மொதேகி தொஷிமிட்சு
வெளியுறவு அமைச்சர் மொதேகி தொஷிமிட்சு
