இலங்கையைத் தாக்கிய சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களுக்கு பிரதமர் தகய்ச்சி சனாஎவின் இரங்கல் செய்தி

2025/11/30
இலங்கையைத் தாக்கிய புயலால் ஏற்பட்ட பல விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததற்கு நான் மிகவும் கவலையடைந்துள்ளேன். பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மனிதாபிமானக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலும், இலங்கையுடனான நமது நட்புறவைக் கருத்தில் கொண்டும், ஜப்பான் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க நிபுணர்கள் குழுவை அனுப்பவும், அவசரகால நிவாரணப் பொருட்களை வழங்கவும் முடிவு செய்துள்ளது.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், பேரிடர் பாதித்த பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்பவும் எனது மனமார்ந்த பிரார்த்தனைகளை தெரிவித்துக் கொள்கிறேன்.