சூறாவளி பேரழிவிற்கு பதிலளிக்கும் விதமாக ஜப்பான் IOM மூலம் தங்குமிடங்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்குகிறது
2025/12/19

டிசம்பர் 19 ஆம் தேதி, இலங்கைக்கான ஜப்பான் தூது வர் மேன்மை தங்கிய அகியோ இசொமதா, சர்வதேச புலம்பெயர் அமைப்பின் [International Organization for Migration (IOM)] இலங்கைக்கான தூதரகத் தலைவர் திருமதி கிறிஸ்டின் பார்கோவுடன் இணைந்து, பேரிடர் மேலாண்மை மையத்தின் (DMC) இயக்குநர் (முனனேற்பாடுகள்) சதுர லியனாரச்சியிடம் தங்குமிடங்களை ஒப்படைத்தார்.
IOM மூலம் வழங்கப்படும் இந்த நன்கொடை உதவி, 1 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாகும், இது 2.5 மில்லியன் அமெரிக்க டாலர் அவசர நன்கொடயின் ஒரு பகுதியாகும், இதை ஜப்பான் அரசு டிசம்பர் 16 ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் அமைப்புகளான IOM, உலக உணவுத் திட்டம் [World Food Programme (WFP)] மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் [United Nations Children’s Fund (UNICEF)] ஆகியவற்றுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கு வழங்க முடிவு செய்தது.
கண்டி, பதுளை மற்றும் கேகாலையில் கடுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு, IOM மூலம், ஜப்பான் சமையலறைப் பொருட்கள், கழுவும் பொருட்கள் மற்றும் படுக்கைப் பொருட்கள் உட்பட 615 தங்குமிடங்களை வழங்கும்.

டிசம்பர் 17 ஆம் தேதி நிலவரப்படி, பேரிடர் மேலாண்மை மையத்தின் [Disaster Management Center (DMC)] சூழ்நிலை அறிக்கையின்படி, 66,000 க்கும் மேற்பட்ட நபர்களும் 22,000 குடும்பங்களும் இன்னும் சொந்த வீடுகள் இல்லாமல் பாதுகாப்பு மையங்களில் உள்ளனர். கூடுதலாக, 100,000 க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன, அதே நேரத்தில் 6,000 க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. இந்த பேரழிவின் பின்னரான சூழ்நிலையில், இந்த உதவி வீடுகளை இழந்தவர்களுக்கு தங்குமிடம் வழங்கவும், அவர்களின் அவசர வாழ்க்கைத் தேவைகளை நிவர்த்தி செய்யும்மென எதிர்பார்க்கப்படுகிறது.
இடம்பெயர்ந்த மக்களின் அன்றாட வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளின் ஒரு பகுதியாக அவர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை இடத்தை உறுதி செய்வது ஒரு அவசரத் தேவை" என்று தூதர் இசொமதா தனது கருத்துக்களில் கூறினார். மேலும், "இந்த உதவி ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான வலுவான நம்பிக்கை மற்றும் நட்பைப் பிரதிபலிக்கிறது, மேலும் தேவைப்படும் காலங்களில் இலங்கை மக்களை ஆதரிப்பதில் ஜப்பானின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ளும் இலங்கை மக்களுடன் ஜப்பான் முழு ஒற்றுமையுடன் நிற்கிறது" என்று வலியுறுத்தினார்.
