ஜப்பான் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட ஒரு பாலத்தை வலுப்படுத்த நிதியுதவி அளிக்கின்றது
2026/3/16

மார்ச் 16, 2026 அன்று, ஜப்பான் தூதுவர் அதிமேதகு திரு. அகியோ இசொமட்டா, “அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவி (GGP)” திட்டத்தின் கீழ் ஒரு திட்டத்திற்க்கு நன்கொடை வழங்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இந்த உடன்படிக்கை திமுது சமூக அபிவிருத்து சங்கத்தின் தலைவர் சங். நாகொல்லே நந்தரத்ன தேரருடன் கைச்சாத்திடப்பட்டது.
ஜப்பான் அரசு திமுது சமூக அபிவிருத்து சங்கம் செயல்படுத்தும் திட்டத்திற்கு 25,432 அமெரிக்க டொலர்களை (சுமார் ரூ. 7.8 மில்லியன்) வழங்கியுள்ளது. இந்தத் திட்டம் டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாலமொன்றைப் பலப்படுத்தவும் மற்றும் பாலத்தை பாதுகாக்கும் முகமாக காப்பு சுவர் ஒன்றை அமைப்பதற்கும் நிதியுதவி வழங்கும். இது 3,200 குடியிருப்பாளர்களின் கல்வி மற்றும் சுகாதார சேவைகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும்.

இலங்கையின் இயற்கை பேரழிவுகள் மீட்பு பணியில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்த ஜப்பான் கவனம் செலுத்துவதை வலியுறுத்தி தூதுவர் ISOMATA கூறுகையில்: “இப்போது இலங்கை மீட்பு மற்றும் மீளமைப்பு கட்டத்தை அடைந்துள்ளதால், ஜப்பான் இலங்கை மக்களிற்கு துணை நிற்பதில் உறுதியாக உள்ளது’’. தூதுவர் மேலும் கூறுகையில்: “நாம் இன்று கைச்சாத்திட்ட திட்டம், டிட்வா சூறாவளியால் பாதிப்படைந்த பகுதிகளின் மீட்பு, மீள் புனரமைப்பு மற்றும் நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஜப்பான் மற்றும் இலங்கை மக்களிடையே நிலைத்திருக்கும் நட்புறவை நீடிக்கும் சின்னமாகவும் திகளும்.” என்றார்.
இந்த நிதியுதவி பெறுவது குறித்து கருத்து தெரிவித்த திமுது சமூக அபிவிருத்து சங்கத்தின் தலைவர் சங். நாகொல்லே நந்தரத்ன தேரர், இவ்வாறு கூறினார்.
“ஜப்பான் மற்றும் இலங்கை நாடுகள் ஒரு அழகான, நீண்டகால நட்புறவைப் பேணிவருகின்றன. அபிவிருத்திக்கு மேலாக, எப்போதும் ஜப்பானியர்கள் துல்லியத்துடனும், ஒழுங்குடனும் மற்றும் கருணையுடனும் செயல்படும் முறையைக் கண்டு நாம் மகிழ்ந்துள்ளோம். எங்கள் நீர்வளத் திட்டம் மற்றும் சமூக கட்டட நிர்மாணம் போன்ற கடந்த கால செயற்திட்டங்களுக்கு இது வழிகாட்டியதாக அமைந்துள்ளது. இந்த நிதியுதவியை வழங்கிய தூதரகம், மதிப்புமிக்க ஜப்பானிய தூதர் மற்றும் தூதரக பணியாளர்கள், எங்கள் ஒருங்கிணைப்பாளருக்கும் எமது நன்றிகள்.” என்றார்.
1989 முதல், ஜப்பான் அடிமட்ட மனித பாதுகாப்பு திட்டங்களுக்கான மானிய உதவித் திட்டத்தின் (GGP) மூலம் இலங்கைக்கு மொத்தம் 62 மில்லியன் அமெரிக்க டொலர் அளவில் உதவிகளை வழங்கியுள்ளது.
