“ஹெலோ கிட்டி” இலங்கை மாணவர்களின் முகத்தில் புன்னகையை கொண்டுவருகிறது
2026/5/25

இலங்கையில் உள்ள ஜப்பான் தூதரகம், சான்ரியோ நிறுவனத்தின் சமூகப் பங்களிப்பு முன்னெடுப்பான “சன்ரியோ நகாயொகு திட்டம்” என்பதன் ஒரு பகுதியாக, உலகளவில் பெரிதும் விரும்பப்படும் ஜப்பானிய கதாபாத்திரமான “ஹெலோ கிட்டி”-யை இலங்கை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், சான்ரியோ நிறுவனத்துடன் இணைந்து இரண்டு விளம்பர நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தது.

சுமார் 500 ஆர்வமுள்ள மாணவியரின் பங்கேற்புடன், இந்நிகழ்ச்சிகள் மே 19ஆம் தேதி நுவகொட புனித ஜோசப் பெண்கள் பள்ளியிலும், மே 20ஆம் தேதி கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்திலும் நடைபெற்றன. மாணவர்கள் சன்ரியோவின் வரலாறு மற்றும் அதன் உலகப் புகழ்பெற்ற கதாபாத்திரமான “ஹெலோ கிட்டி” பற்றி அறிந்துகொண்டதோடு, படைப்பாற்றல் மிக்க ஓவியச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டனர். நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக, “ஹெலோ கிட்டி”யே திடீரெனத் தோன்றியது மாணவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததுடன், அதனுடன் புகைப்படங்கள் எடுத்தும், தொட்டுப் பழகியும் மறக்க முடியாத நினைவுகளைத் தந்தது.

சன்ரியோ நிறுவனம், தனது “சன்ரியோ கேரக்டர் எய்ட்” முன்னெடுப்பையும் பகிர்ந்துகொண்டது. இதில், பல்வேறு நோய்களுக்காகக் குழந்தைகள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனைகளுக்கு “ஹெலோ கிட்டி” சென்று வருகிறது. இந்த முன்னெடுப்புகள், “ஹெலோ கிட்டி”யின் சக்தியின் மூலம் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிப்பதில் சான்ரியோ கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன.இந்தக் கனவு போன்ற திட்டங்கள், ஜப்பானிய “கவாய்” கலாச்சாரத்தின் வசீகரத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், இலங்கையில் ஜப்பானிய கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு நல்ல படியாகக் கருதப்படுகின்றன.
© ’26 SANRIO CO., LTD. APPR. NO. GS670009
