சசகாவா நினைவு இலங்கை-ஜப்பான் கலாச்சார மைய சம்பிரதாயபூர்வ திறப்பு விழா

2026/6/12

ஜூன் 11 ஆம் தேதி, கொழும்பில் "சசகாவா மையம்" என்று அழைக்கப்படும் சசகாவா நினைவு இலங்கை-ஜப்பான் கலாச்சார மையத்தின் சம்பிரதாயபூர்வ திறப்பு விழா நடைபெற்றது.

  

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்து கொண்டார். விழாவில் ஜப்பானின் தி நிப்பொன் அறக்கட்டளையின் கெளரவத் தலைவர் திரு. யோஹெய் சசகாவா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் தூதுவர் மேதகு அகியோ இசொமதா ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ. இராமலிங்கம் சந்திரசேகர், மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி கௌரவ ஹினிதும சுனில் செனவி அகியோர் இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

  

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக, சசகாவா மையம் ஜப்பான்-இலங்கை நட்புறவு மற்றும் பரிமாற்றத்தின் ஒரு புகழ்பெற்ற சின்னமாகத் திகழ்ந்து வருகிறது. இது ஜப்பானிய மொழி வகுப்புகள் முதல் தொழில்முறை திறன் மேம்பாட்டு கருத்தரங்குகள் வரையிலான பரந்த அளவிலான செயல்பாடுகளை ஆதரித்து வருகிறது.

கடந்த செப்டம்பரில் மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் ஜப்பான் பயணத்தைத் தொடர்ந்து, ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் ஒரு புதிய அத்தியாயத்தில் நுழைந்துள்ள நிலையில், புதிதாகத் திறக்கப்பட்ட இந்த மையம் நட்புறவின் சின்னமாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார, கல்வி மற்றும் மக்கள் பரிமாற்றங்களுக்கான ஒரு மையமாகவும் செயல்படும்.

பட உதவி: பிரதமரின் ஊடகப் பிரிவு மற்றும் பாதுகாப்பு அமைச்சு