புதிய துறைமுக சுகாதார அலுவலகம் இலங்கையில் எல்லை சுகாதார பாதுகாப்பை பலப்படுத்துகிறது

2026/7/28

கொழும்பு, 28 ஜூலை 2026 புலம்பெயல்தலுக்கான சர்வதேச அமைப்பு (IOM) மற்றும் இலங்கை சுகாதார அமைச்சு, ஆகியன இணைந்து ஜப்பான் அரசாங்கத்தின் ஆதரவுடன், கொழும்பு துறைமுகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட துறைமுக சுகாதார அலுவலகத்தை திறந்து வைத்துள்ளன. இது இலங்கையின் எல்லை சுகாதார பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் பொது சுகாதார அவசரநிலைகளுக்கான ஆயத்த நிலையிலும் ஒரு மைல்கல்லைக் குறிக்கிறது.
 
கொழும்பு துறைமுகத்தில் சுகாதாரப் பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் அவசர கால நடவடிக்கைகளுக்கான திறன்களை வலுப்படுத்துவதற்காக இந்தப் புதிய வசதி சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டது. 2025 ஆம் ஆண்டில் மாத்திரம், துறைமுக சுகாதார சேவை 4,190 க்கும் மேற்பட்ட தடையற்ற அனுமதி சான்றிதழ்களை வழங்கியுள்ளதுடன், 365 கப்பல் சுகாதார பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளது. இது பாதுகாப்பான கடல்சார் வர்த்தகத்திற்கு ஆதரவளிக்கும் அதே வேளையில் பொது சுகாதாரத்தை பாதுகாப்பதில் அதன் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது.
 
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கௌரவ டொக்டர் நளிந்த ஐயதிஸ்ஸ கூறுகையில், “இன்றைய திறப்பு விழாவானது இலங்கையின் சுகாதார பாதுகாப்பு மற்றும் தேசிய மீள்திறனில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த முயற்சியானது, ஆரோக்கியமான, பாதுகாப்பான மற்றும் மிகவும் மீள்திறன் கொண்ட இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதுடன் எதிர்கால பொது சுகாதார சவால்களை எதிர்கொள்ள எமது துறைமுகங்கள் தயாராக இருப்பதை உறுதி செய்கிறது" என தெரிவித்தார்.


கொழும்பு துறைமுகத்தில் பொது சுகாதார அச்சுறுத்தல்களைத் தடுக்கவும், கண்டறியவும் மற்றும் பதிலளிக்கவும் தேவையான அத்தியாவசிய எல்லை சுகாதார சேவைகளை துறைமுக சுகாதார அலுவலகம் வழங்கும். சர்வதேச கப்பல்களைப் பரிசோதித்தல், தடையற்ற அனுமதி மற்றும் கப்பல் சுகாதாரச் சான்றிதழ்களை வழங்குதல், கண்காணிப்பு மற்றும் நோய்க்காவிகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் மற்றும் அவசர பொது சுகாதார நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல் ஆகியவை இதன் செயல்பாடுகளில் அடங்கும்.
 
இந்நிகழ்வில் கலந்துகொண்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் கௌரவ அனுர கருணாதிலக குறிப்பிடுகையில், "இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முன்னணி கடல்சார் மையமாக கொழும்பு துறைமுகத்தின் நிலையை வலுப்படுத்த அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இந்த புதிய துறைமுக சுகாதார அலுவலகமானது, சர்வதேச சுகாதார தரங்களை பூர்த்தி செய்யும் அதேவேளையில் அதிகரித்து வரும் சர்வதேச கடல் போக்குவரத்தை பாதுகாப்பாகவும் திறமையாகவும் நிர்வகிக்கும் எமது திறனை மேம்படுத்துகிறது. மேலும், உலகளாவிய கடல் வர்த்தகத்திற்கான பாதுகாப்பான, மீள்திறன் கொண்ட மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த நுழைவாயிலாக இலங்கையின் நற்பெயரை இது வலுப்படுத்துகிறது" என்றார்.
 
ஜப்பான் அரசாங்கத்தின் ஆதரவுடன் IOM இனால் நடைமுறைப்படுத்தப்படும் ''தென்மேற்கு ஆசியாவில் தொற்று நோய்களுக்கு பதிலளிப்பதற்கான எல்லைக் கட்டுப்பாட்டுத் திறனை வலுப்படுத்தும் செயற்றிட்டத்தின்" கீழ் இந்த துறைமுக சுகாதார அலுவலகம் நிறுவப்பட்டது. இலங்கையில், இந்தத் திட்டம் சர்வதேச சுகாதார விதிமுறைகளுக்கு 2005) இணங்குவதை மேம்படுத்தவும் எதிர்கால பொது சுகாதார அச்சுறுத்தல்களுக்கு எதிராக மீள்திறனை கட்டியெழுப்பவும், உட்கட்டமைப்பு, தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் முதலீடுகள் மூலம் கொழும்பு துறைமுகம் மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு ஆதரவளிக்கிறது.


வைத்திய உபகரணங்கள் அன்பளிப்பு, மேம்படுத்தப்பட்ட கழிவு முகாமைத்துவம், நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கான பயிற்சி ஆகியவற்றின் ஊடாக, எல்லை சுகாதார அமைப்புகளையும் இந்த திட்டம் பலப்படுத்துகிறது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் நிரப்பு முதலீடுகள், எதிர்கால பொது சுகாதார அவசரநிலைகளுக்கான ஆயத்த நிலையை மேம்படுத்தும் அதேவேளையில் பாதுகாப்பான மற்றும் திறமையான சர்வதேச பயணங்களை எளிதாக்குவதற்கான இலங்கையின் திறனை மேலும் விரிவுபடுத்துகின்றன.
 
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேதகு அகியோ இசோமடா அவர்களின் மேற்கோள்:
 
"நுழைவாயில்களில் செயற்பாட்டுத் திறன் சுகாதார பாதுகாப்பு மற்றும் முகவர் அமைப்புகளுக்கிடையிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவதன் மூலம், இந்த திட்டமானது வலுவான எல்லைகளுக்கும் பாதுகாப்பான போக்குவரத்துக்கும் ஆதரவளிப்பதுடன், தொற்று நோய் அச்சுறுத்தல்களுக்கு எதிரான மீள்திறனை வலுப்படுத்தி, நாட்டின் பொருளாதார மீட்பிற்கும் பங்களிக்கிறது."


இலங்கை மற்றும் மாலைதீவுக்கான புலம்பெயல்தலுக்கான சர்வதேச அமைப்பின் தலைமை அதிகாரி கிறிஸ்டின் பார்கோ மேலும் கூறுகையில்,"புதிதாக நிறுவப்பட்ட இந்த துறைமுகசுகாதார அலுவலகமானது, பொது சுகாதார அச்சுறுத்தல்களை கண்டறிதல், அவற்றுக்கு தயாராகுதல் மற்றும் பதிலளிப்பதற்கான நாட்டின் திறனை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை பிரதிபலிக்கிறது. பாதுகாப்பான, முறையான மற்றும் வழமையான குடியேற்றத்தை எளிதாக்கும் அதேவேளையில் பொது சுகாதாரத்தை பாதுகாக்கவும், மீள்திறன் கொண்ட நுழைவாயில்களை வலுப்படுத்துவதற்கும், பேணுவதற்குமான தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதில் ஐழுஆ தொடர்ந்து உறுதியாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
 
எல்லை முகாமைத்துவம் மற்றும் பொது சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்காக IOM, இலங்கை அரசாங்கம் மற்றும் பங்குதாரர்களுடன் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறது. இது மக்களைப் பாதுகாப்பதற்கும், பாதுகாப்பான போக்குவரத்தை எளிதாக்குவதற்கும் மற்றும் தேசிய மீள்திறனை வலுப்படுத்துவதற்குமான, மீள்திறன் எதிர்காலத்திற்கு தயாராக உள்ள நுழைவாயில்களுக்கு ஆதரவளிக்கிறது. වේ."