புயலுக்கு பின்னரான மீளெழுச்சியில், இடைக்கால தங்குமிடங்களின் கையளிப்பு ஓர் முக்கிய மைல் கல்லாக அமைந்தது
2026/9/17

கண்டி, இலங்கை, 17 செப்டம்பர் 2026 புலம்பெயர்தலுக்கான் சர்வதேச அமைப்பு (IOM) மற்றும் ஜப்பான் அரசாங்கம், இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, பிட்வா புயலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 135 இடைக்காலத் தங்குமிடங்களில் 62 தங்குமிடங்களை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வை இன்று கண்டி, ரங்கலவத்தையில் நடத்தியது.
அவசர நிலை உச்சத்தை எட்டயிருந்த காலப்பகுதியில், சுமார் 300000 பேர் இடம்பெயர்ந்தனர். பல குடும்பங்கள் தமது வீடுகளை இழந்ததுடன், அதிக ஆபத்துள்ள பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலைக்கும் உள்ளாகினர். இதற்கு பதிலளிக்கும் வகையில், ஜப்பான் அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட திட்டத்தின் கீழ் கண்டி, பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 135 இடைக்கால தங்குமிடங்களை அமைப்பதனை IOM சாத்தியப்படுத்தியது.

"புயலினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய மாகாணமும் ஒன்றாகும். வீடமைப்பு மற்றும் வாழ்வாதாரங்கள் மீது குறிப்பிடத்தக்க வகையில் பாதிப்பிற்குள்ளாகின. பாதிக்கப்பட்ட மக்கள் மீளெழுச்சி அடைவதற்கும் தமது வாழ்க்கையை மீள கட்டி எழுப்புவதற்குமான பாதுகாப்பான இடங்களை இவ் இடைக்கால தங்குமிடங்கள் வழங்குகின்றன," [என திரு. இந்திக உதாவத்த, மாவட்டச் செயலாளர் (அரசாங்க அதிபர்). கண்டி மாவட்டம்] தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான முன்னுரிமைகள் திட்டத்திற்கும் அமைவாக முன்னெடுக்கப்பட்ட இத்தங்குமிடங்கள், சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதுடன், உள்ளுர் தேவைகளுக்கும் ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன.
இம்முயற்சியானது, ஜப்பான் மக்களினதும் ஜப்பான் அரசாங்கத்தினதும் பெருந்தன்மையான ஆதரவினால் சாத்தியமாகியுள்ளது. இது இலங்கையின் மீட்சி மற்றும் பேரிடர்களை எதிர்கொள்ளும் தாங்குதிறனை வலுப்படுத்துவதற்கான ஜப்பானின் நீண்டகால அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மேதகு அகியோ இசொமதா தெரிவித்ததாவது:
"இத்திட்டமானது இலங்கை ஆயுதப்படைகள் மற்றும் உள்ளுர் சமூகங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த மூலம் பங்குதாரர்களின் நெருங்கிய ஒத்துழைப்பின் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் ஊடாக ருவாகியுள்ள ஒத்துழைப்பு உணர்வானது, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எல் நினோவின் தாக்கங்கள் உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களின் போது பாரிய சேதங்களைத் தடுப்பதற்கும் விரைவான மீட்சியை ஏற்படுத்துவதற்குமான சமூகங்களின் ஆற்றல்களுக்கு முக்கியமான வளமாக அமையும்."
அவர் மேலும் தெரிவித்ததாவது:
"வீதிகளைப் புனரமைத்தல் மற்றும் வலுப்படுத்துதல், அத்துடன் பேரிடர் அபாயக் குறைப்பு போன்ற துறைகளில் மேலதிக உதவிகளை வழங்குவதற்கு ஜப்பான் எதிர்பார்க்கிறது.வானிலை முன்னறிவிப்புத் திறன்களையும் முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகளையும் வலுப்படுத்தும் நோக்கில் புத்தளத்தில் டொப்ளர் ரேடார் நிலையமொன்றை அமைப்பதற்கான தற்போதைய உதவிக்கு மேலதிகமாக இவ்வுதவிகள் வழங்கப்படும். உட்கட்டமைப்பு ரீதியாக மட்டுமன்றி, பேரிடர் தயார்நிலைக்கான ஒத்துழைப்பு உணர்வின் அடிப்படையிலும், 'மீளக் கட்டியெழுப்புவோம் மேலும் சிறந்த முறையில்' (Build Back Better) என்ற அணுகுமுறையுடன் நாம் ஒன்றிணைந்து தொடர்ந்து செயற்படுவோம்."

பேரிடர் ஏற்பட்டதிலிருந்து, உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்கும் ஆரம்பகட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கும் IOM தேசிய மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது. ஜப்பான் அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படும் அதே திட்டத்தின் கீழ், இடைக்காலத் தங்குமிடங்களை அமைப்பதுடன், 3,000 அத்தியாவசிய வீட்டுப் பாவனைப் பொருட்கள் அடங்கிய பொதிகளும் 1,000 தங்குமிடப் புணரமைப்பு கருவித் தொகுப்புகளும் IOM இனால் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்துள்ளனர்.
"கடந்த சில மாதங்களில், தமது வீடுகளை மட்டுமன்றி, எதிர்காலம் குறித்த உறுதிப்பாட்டையும் இழந்த குடும்பங்களை நாம் சந்தித்துள்ளோம். இன்று, இந்தத் தங்குமிடங்கள் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கின்றன. குடும்பங்கள் மீண்டெழுவதற்கும், தமது வாழ்வாதாரங்களை மீள நிலைநிறுத்துவதற்கும், எதிர்காலத்திற்கான தாங்குதிறனை வலுப்படுத்துவதற்கும் IOM அவர்களுடன் தொடர்ந்து துணைநிற்கும்," என இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் தலைமை அதிகாரி கிறிஸ்டின் பார்கோ தெரிவித்தார்.
இந்த மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பேரிடர் அபாய முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கும், பாதிப்புக்குள்ளாகக் கூடிய சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்கும், எதிர்காலப் பேரிடர்களின் தாக்கங்களைக் குறைப்பதற்கும், IOM மற்றும் ஜப்பான் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்துடனும் அதன் பங்குதாரர்களுடனும் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.