ஜப்பான் மற்றும் இலங்கை இடையே முதலாவது Joint Crediting Mechanism (JCM) குழுநிலைச் சந்திப்பு முன்னெடுப்பு

2023/10/13

 
2023 ஒக்டோபர் 13 ஆம் திகதியன்று, ஜப்பான் மற்றும் இலங்கையிடையிலான Joint Crediting Mechanism (JCM)க்கான இணை குழுவின் முதலாவது சந்திப்பு நடைபெற்றது. 2022 ஒக்டோபர் 10 ஆம் திகதி நடைபெற்ற JCM தொடர்பான கூட்டாண்மை நினைவூட்டல் உடன்படிக்கை கைச்சாத்திடலை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட இந்த சந்திப்பினூடாக, சம்பந்தப்பட்ட JCM விதிமுறைகளை நிறுவுவதற்கான அடித்தளத்தை JCM க்கு ஏற்படுத்தியிருந்தது.


இணைந்த குழு (JC) சந்திப்பின் போது, JC க்கான விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்ததுடன், இணை தலைமை செயற்பாட்டாளர்களின் நியமனங்களும் வழங்கப்பட்டிருந்தன. ஜப்பான் சார்பாக, ஜப்பானிய தூதுக்குழுவின் அமைச்சரும் பிரதி தலைமை அதிகாரியுமான திரு. கொட்டாரோ கட்சுகி மற்றும் இலங்கை சார்பாக, சூழல் அமைச்சின் செயலாளர் கலாநிதி. அனில் ஜாசிங்க ஆகியோர் பங்கேற்றிருந்தனர். JCM ஸ்தாபிப்புக்காக JC இனால் பின்தொடரப்பட்ட விதிமுறைகள் பாரிஸ் உடன்படிக்கையின் 6 ஆம் ஆக்கத்தின் பிரகாரம் பின்பற்றப்பட்டிருந்தன. மேலும், திட்டமிடப்பட்ட JCM திட்டத்துக்கான Project Idea Note (PIN) மீளாய்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது JCM திட்டமாகவும் அமைந்திருப்பதாக கருதப்படுகின்றது.


இலங்கையினுள் JCM திட்டத்தை ஊக்குவிப்பதற்காக கருத்தரங்குகளை ஜப்பானிய தூதரகம் முன்னெடுத்திருந்தது. சூழல் மற்றும் வலு ஆகிய பிரிவுகளில் ஆதரவளிப்பதனூடாக இலங்கையினுள் நிலைபேறான பொருளாதார வளர்ச்சிக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கின்றது.