ஒரு பணியாளராக உங்களுக்கான ஆதரவு அமைப்புகள்

* உண்மையில் குறிப்பிட்ட திறன்மிகு பணியாளரில் (i) மற்றும் (ii) என்ற இரு வகைகள் உள்ளன. இங்கு நாம் திறன்மிகு பணியாளர் (i) குறித்து விவரிக்க இருக்கிறோம், இது கிட்டத்தட்ட அனைவருக்கும் பொருந்துவதாகும்.

SSW-இன் ஒரு மாபெரும் சிறப்பம்சம் , ஜப்பானியத் தரப்பிலிருந்து கிடைக்கும் தாராளமான ஆதரவு அமைப்பு ஆகும். SSW ஆக ஜப்பானுக்கு வரும் அனைவரும், அவர்கள் நிம்மதியுடன் பணியாற்றுவதற்கு ஏதுவாக, அவர்களுடைய பணியமர்த்துநர்களிடமிருந்து கீழ்கண்ட ஆதரவினை பெற முடியும்.
1. ஜப்பான் வருவதற்கு முன்பாக, உங்களுக்குப் பரிச்சயமான மொழியில் ஜப்பானில் வாழ்வது குறித்த வழிகாட்டுதல்களைக் கிடைக்கப் பெறுவீர்கள்.
2. நீங்கள் ஜப்பான் வந்தடைந்ததும் விமானநிலையத்தில் வரவேற்கப்படுவீர்கள் மற்றும் தாயகம் திரும்பும் போது விமானநிலையத்தில் வழியனுப்பிவைக்கப்படுவீர்கள்.
3. ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது, வங்கிக் கணக்கைத் துவங்குவது மற்றும் அலைப்பேசி உள்ளிட்ட வாழ்வாதார நடைமுறைகளை ஜப்பானில் மேற்கொள்வதற்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.
4. நீங்கள் ஜப்பானில் வாழ உதவுவதற்காக நாங்கள் ஜப்பானிய சமூகத்தின் விதிகள் மற்றும் இங்கிதங்கள், ஜப்பானில் போக்குவரத்தை பயன்படுத்தும் விதம் மற்றும் பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடர்களின் போது எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் ஆகியவற்றுக்கான அறிமுக வகுப்புகளை நடத்துகிறோம்,
5. உங்கள் உள்ளூர் நகரக் கூடத்தில் ஒரு குடியிருப்பவராக பதிவு செய்வதற்கு, வரிகள் போன்ற நடைமுறைகள் மற்றும் ஆவணங்களை பூர்த்திசெய்வதற்கும் கூட ஆதரவு தரப்படும்.
6. நீங்கள் தொடர்ந்து ஜப்பானிய மொழி பயில்வதற்கும் ஆதரவு தரப்படும்
7. உங்களுக்கு ஏதாவது பிரச்சனைகள் இருக்குமானால், ஆலோசனை பெறுவதற்கு உங்களின் தாய்மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ உங்களால் கலந்தாலோசிக்க முடியும்.
8. ஜப்பானிய சமூகத்தில் நீங்கள் கூடிய விரைவில் நன்கு பரிச்சயப்படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக ஜப்பானிய மக்களுடன் கலந்துரையாடும் வாய்ப்புகளிலும் நீங்கள் பலனடைவீர்கள்.
9. உங்களின் பணியமர்த்துநர் உங்களைப் பணிவிலக சொல்லும் பட்சத்தில், புதிய வேலைத் தேடிக்கொள்ள உங்களுக்கு நாங்கள் உதவுவோம்.
10. நிறுவனங்களில் SSW ஆதரவுத் தலைவர்களுடன் பல விஷயங்களில் கலந்தாலோசிக்க நாங்கள் ஒழுங்குமுறையாக சந்திப்புகளை நடத்திவருகிறோம்.

ஒப்புதல் அளிக்கும் நிறுவனங்கள்

1. வெளிநாட்டவரை வரவழைக்க ஒப்புதல் அளிக்கும் நிறுவனங்களுக்கான கட்டளை விதிகள்

  1. வெளிநாட்டவருடனான பணி ஒப்பந்தம் தகுந்தவாறு உள்ளது
  2. நிறுவனத்தைப் பொருத்தவரை அது தகுந்ததாக உள்ளது (எ.கா: கடந்த 5 ஆண்டுகளில் குடிவரவு அல்லது தொழிலாளர் நலச் சட்ட மீறல் எதுவுமில்லை)
  3. அது வெளிநாட்டவர்களை ஆதரிக்க அமைப்புகளைக் கொண்டிருக்கிறது (எ.கா. வெளிநாட்டவர் புரிந்துகொள்ள கூடிய மொழியில் ஆதரவினை வழங்க முடியும்)
  4. வெளிநாட்டவர்களை ஆதரிப்பதற்கான திட்டங்கள் தகுந்தவாறு உள்ளன (எ.கா. அன்றாட வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்கள் போன்றவை)

2. ஒப்புதல் அளிக்கும் நிறுவனங்களின் கடமைகள்

  1. வெளிநாட்டவர்களுடனான பணி ஒப்பந்தங்களின் விதிகள் நிறைவேற்றப்பட்டன (எ.கா தகுந்த ஊதிய கொடுப்பனவு)
  2. வெளிநாட்டவர்களுக்கு தகுந்த ஆதரவு வழங்கப்படுகிறது
    பதிவுபெற்ற ஆதரவு நிறுவனம் ஒன்றுக்கு ஆதரவுச் சேவைகள் அவுட்சோர்ஸிங் செய்யப்படலாம்.
     அனைத்துச் சேவைகளும் அவுட்சோர்ஸிங் செய்யப்பட்டிருக்குமானால், 1③ விதிகளும் நிறைவேற்றப்பட வேண்டும்.
  3. குடிவரவுச் சேவைகள் முகமைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு படிவங்கள்

குறிப்பு: ① முதல் ③ வரையான கடமைகளை நிறைவேற்ற தவறும் நிறுவனங்கள், வெளிநாட்டவர்களை ஏற்க அனுமதிக்கப்படமாட்டார்கள், மற்றும் குடிவரவுச் சேவைகள் முகமையிடமிருந்து வழிகாட்டுதல்கள் அல்லது இம்ப்ரூவ்மெண்ட் ஆர்டர்கள் வழங்கப்படக்கூடும்.

பதிவுபெற்ற ஆதரவு
நிறுவனங்கள் பற்றி

1. பதிவு செய்வதற்கான கட்டளை விதிகள்

  1. நிறுவனத்தைப் பொருத்தவரை அது தகுந்ததாக உள்ளது (எ.கா: கடந்த 5 ஆண்டுகளில் குடிவரவு அல்லது தொழிலாளர் நலச் சட்ட மீறல் எதுவுமில்லை)
  2. அது வெளிநாட்டவர்களை ஆதரிக்க அமைப்புகளைக் கொண்டிருக்கிறது (எ.கா. வெளிநாட்டவர் புரிந்துகொள்ள கூடிய மொழியில் ஆதரவினை வழங்க முடியும்)

2. பதிவுபெற்ற ஆதரவு நிறுவனங்களின் கடமைகள்

  1. வெளிநாட்டவர்களுக்கு தகுந்த ஆதரவு வழங்கப்படுகிறது
  2. குடிவரவுச் சேவைகள் முகமைக்கு சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு படிவங்கள்

குறிப்பு: கடமைகள் ① அல்லது ② -ஐ நிறைவேற்ற தவறும் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்படும்.

குடிவரவுச் சேவைகள் முகமை, பதிவுபெற்ற ஆதரவு நிறுவனங்கள், ஒப்புதல் அளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டவர் ஆகியோரிடையிலான உறவு பின்வருமாறு:
									ஒப்புதல் அளிக்கும் நிறுவனம் வெளிநாட்டவருடன் ஒரு பணி ஒப்பந்தத்தை நிறைவேற்றி, அந்த வெளிநாட்டவருக்கு ஆதரவினை வழங்குகிறது. ஒப்புதல் அளிக்கும் நிறுவனம், வெளிநாட்டவருக்கான ஆதரவினை ஒரு பதிவுபெற்ற ஆதரவு நிறுவனத்திற்கு அவுட்சோர்ஸிங் செய்யவும் கூடும்.
									குடிவரவுச் சேவைகள் முகமையானது பதிவுபெற்ற ஆதரவு நிறுவனங்களின் பதிவு மற்றும் பதிவுரத்து ஆகியவற்றை செய்கிறது. பதிவுபெற்ற ஆதரவு நிறுவனம் வெளிநாட்டவருக்கு ஆதரவினை வழங்குகிறது.
									குடிவரவுச் சேவைகள் முகமை, பணியிடத்தில் சோதனைகளை நடத்தி ஒப்புதல் அளிக்கும் நிறுவனங்களுக்கு இம்ப்ரூவ்மெண்ட் ஆர்டர்களை வழங்குகிறது.

Blossom! in Japan.

கீழே காண்பிக்கப்படும் வீடியோ காட்சிகள் 2022 மார்ச் மாதத்தில் தயாரிக்கப்பட்டவையாகும். 2022 மே மாதம் முதல், முழுமையான கண்டிப்பான துறைகளின் எண்ணிக்கை 12 ஆகும்.

  • Play movie in a new window:14 in demand occupations
  • Play movie in a new window:Specified Skilled Workers supported in work & life
  • Play movie in a new window:utilize your skills experience
Page Top