வசிப்பிட SSW தகுநிலை என்பது என்ன?

விசா மற்றும் வசிப்பிடத் தகுநிலை

ஒரு பொது விதியாக, ஜப்பானிற்கு வர விரும்பும் வெளிநாட்டவர், அந்த வெளிநாட்டிலுள்ள ஜப்பான் தூதரகத்தில் (வெளிநாட்டு விவகார அமைச்சகம்) ஒரு விசா பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒரு விசா பெற்றிருப்பது மட்டுமே ஜப்பானில் நுழைவதற்கான உத்திரவாதமாகாது. நீங்கள் ஜப்பான் வந்தடைந்ததும், வசிப்பிடத்திற்கான ஒரு தகுநிலையை பெற வேண்டியுள்ளதால் விமானநிலையம் போன்றவற்றில் நீதி அமைச்சகத்தின் குடிவரவு சேவைகள் முகமை தேவையான சோதனைகளுக்கு உட்பட வேண்டும், இது நீங்கள் ஜப்பானில் மேற்கொள்ள விரும்புகின்ற நடவடிக்கைக்கு இணக்கமுள்ளதாக இருக்க வேண்டும். இதன்படி, “விசா” மற்றும் “வசிப்பிட தகுநிலை” ஆகியவை வெவ்வேறு நிறுவனங்களின் அதிகார எல்லையின் கீழ் வருகின்ற தனித்தனி நடைமுறைகள் ஆகும். இந்தப் பக்கத்தில் தரப்பட்டுள்ள SSW அமைப்பானது ஒரு வகை வசிப்பிட தகுநிலை ஆகும். SSW இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது, "குறிப்பிட்ட திறமை கொண்ட பணியாளர்" - (i) மற்றும் (ii) .

SSWகளின் சிறப்பம்சங்கள்

ஜப்பானில் SSW ஆக பணியாற்ற தகுதியுடைய அனைவரும் குறைந்தது 18 வயதுடையவர்களாக, நல்ல உடல்நலம் உள்ளவர்களாக மற்றும் கண்டிப்பாக திறன்கள் வுடையவர்களாக, முன்கூட்டிய பயிற்சி பெறாமலே உடனடியாக வேலையை தொடங்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும்.
இடைநிகழ்வாக, சர்வதேசப் பங்களிப்பு நோக்கத்திற்காக“டெக்னிகல் இண்டெர்ன் ட்ரெய்னிங்” என மற்றொரு அமைப்பும் உள்ளது, இதில் ஜப்பானில் பணியின் போது பயிற்சி மூலமாக பணியாளர்கள் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்வார்கள், பிறகு தாயகம் திரும்பியதும் ஜப்பானிய தொழில்நுட்ப சிறப்பறிவை பகிர்ந்துகொள்வார்கள். இந்த அமைப்பின் கீழ் ஒரு குறிப்பிட்ட அளவு பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்கள், தமது வேலைத் திறன் மற்றும் ஜப்பானிய மொழியறிவு பரிட்சைக்கு உட்படாமல், அதே துறையில் SSW (i) க்கு வசிப்பிட தகுநிலையை மாற்றுவதற்கான வழி உள்ளது. SSW (i) மற்றும் (ii) இடையே உள்ள முக்கிய வேறுபாடுகளுக்கு பின்வரும் விளக்கப்படத்தைப் பார்க்கவும்.

குறிப்பிட்ட திறமை கொண்ட பணியாளர்

SSW (i): குறிப்பிட்ட ஒரு தொழில்துறையில் கணிசமான அளவு ஞானம் அல்லது அனுபவம் தேவைப்படுகின்ற பணியில் ஈடுபடுத்தப்படுகின்ற வெளிநாட்டவருக்கு வசிப்பிடத்திற்கான ஒரு தகுநிலை
SSW (ii): இது குறிப்பிட்ட தொழில் துறைகளில் திறமையான திறன்கள் தேவைப்படும் வேலைகளில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கான வசிப்பிட நிலை.

தங்கும் காலம் SSW (i): மொத்தம் 5 ஆண்டுகள் வரை
SSW (ii): புதுப்பித்தல் அடிப்படையில் வசிப்பிட வரம்பு இல்லை
திறன் நிலை SSW (i): பரிட்சையின் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டும் (டெக்னிக்கல் இண்டெர்ன் ட்ரெய்னிங் (ii) முடித்த வெளிநாட்டவர்களுக்கு பரிட்சையிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது)
SSW (ii): பரிட்சையின் மூலம் உறுதிசெய்யப்பட வேண்டும்
ஜப்பானிய மொழி புலமை நிலை SSW (i): பரிட்சையின் மூலம் அன்றாட வாழ்க்கை, பணி போன்றவற்றுக்கான ஜப்பானிய மொழி புலமை உறுதிசெய்யப்பட வேண்டும்
SSW (ii): பரீட்சைகள், முதலியவற்றின் மூலம் உறுதிப்படுத்த வேண்டிய அவசியமில்லை.
குடும்ப உறுப்பினர் உடன்வருதல் SSW (i): அடிப்படையில் அனுமதி கிடையாது
SSW (ii): தேவையை (மனைவி, குழந்தைகள்) பூர்த்தி செய்தால் சாத்தியம்

SSW (i) ஏற்கும் நிறுவனம் அல்லது பதிவுபெற்ற ஆதரவு நிறுவனத்தின் ஆதரவிற்கான தகுதியுடைமை

ஜப்பானில் SSW ஆக பணியாற்ற உங்களை அனுமதிக்கும் தொழில்கள்
ஒரு SSW ஆக உங்களைப் பணியாற்ற அனுமதிக்கின்ற குறிப்பிட்ட கடமைகள், 16 தொழில்துறை வகைப்பாடுகளில் கீழே தரப்பட்டுள்ளன.
"நர்சிங் கேர்", "ஆட்டோமொபைல் போக்குவரத்து வணிகம்", "ரயில்வே", "வனவியல்" மற்றும் "மரத் தொழில்" துறையில் SSW (i) மட்டுமே உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.

உடல்நலம், தொழிலாளர் மற்றும் நல அமைச்சகத்தின் அதிகார எல்லைக்குட்பட்டது

  • நர்சிங் கேர்உடல் பராமரிப்பிற்குக் கூடுதலாக (பயனரின் உடல் மற்றும் மன நிலைமையைப் பொருத்து குளிப்பாட்டுதல், உணவூட்டுதல், உடற்கழிவுகள் அகற்ற உதவுதல் போன்றவை) வேறு ஏதாவது ஆதரவு சேவைகள் (பொழுதுபோக்கு, செயல்பணி பயிற்சி போன்றவை)

  • கட்டடத் தூய்மையாக்கல்உள்புற கட்டடத் தூய்மையாக்கல்

பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அதிகார எல்லைக்குட்பட்டது

  • தொழில்துறை பொருட்களின் உற்பத்தி · இயந்திர வேலை மற்றும் உலோக செயலாக்கம்
    · மின்சாரம் மற்றும் மின்னணு உபகரணங்களின் தொகுப்பு
    · உலோக மேற்பரப்பு சிகிச்சை
    · அட்டைப்பெட்டி மற்றும் நெளி அட்டைப் பெட்டி தயாரித்தல்
    · முன் வார்ப்புக் கற்காரை உற்பத்தி
    · குப்பையிலிருந்து பெறப்பட்ட காகிதம் மற்றும் பிளாஸ்டிக்குகள் அடர்த்தியான எரிபொருள் தயாரித்தல்
    · மேஜைப் பாத்திரங்கள் மற்றும் ஆபரணங்கள் மட்பாண்ட உற்பத்தி
    · அச்சிடுதல் / புத்தகம் பிணைத்தல்
    · நெசவுமான ஜவுளி உற்பத்தி
    · தையல்

நிலம், உள்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் அதிகார எல்லைக்குட்பட்டது

  • கட்டுமானம்· சிவில் இன்ஜினியரிங்
    · கட்டுமானம்
    · உள்கட்டமைப்பு வசதிகள் & உபகரணங்கள்

  • கப்பல் கட்டுதல் மற்றும் கடல்சார் இயந்திரங்கள் தொழில்துறை· கப்பல் கட்டுமானம்
    · கப்பல் இயந்திரங்கள்
    · கப்பல் மின்சார மற்றும் மின்னணு உபகரணங்கள்

  • ஆட்டோமொபைல் பழுதுநீக்குதல் மற்றும் பராமரித்தல்ஆட்டோமொபைல் தினசரி பராமரிப்பு, வழமையான பராமரிப்பு, சான்றளிக்கப்பட்ட பராமரிப்பு, சான்றளிக்கப்பட்ட பராமரிப்பில் தற்செயலாக வேலை

  • வான் பயணம்விமானநிலைய கிரவுண்ட் ஹேண்ட்லிங் (கிரவுண்ட் டிரைவிங் ஆதரவு சேவைகள், பேகேஜ்/கார்கோ ஹேண்ட்லிங் சேவைகள் போன்றவை) விமானப் பராமரிப்பு (விமானம், சாதனம் போன்றவற்றின்) பராமரிப்பு சேவைகள்

  • தங்குமிட வசதிதங்குமிட வசதி-தொடர்புடைய சேவைகள் உள்பட வரவேற்புப் பணி, திட்டமிடல் மற்றும் மக்கள் தொடர்பு, வாடிக்கையாளர் சேவை, ரெஸ்டாரண்ட் சேவை போன்றவை

  • ஆட்டோமொபைல் போக்குவரத்து வணிகம்· மோட்டார் லாரி டிரைவர்கள்
    · டாக்ஸி டிரைவர்கள்
    · பேருந்து ஓட்டுநர்கள்

  • ரயில்வே· பாதை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு
    · மின்சார வசதிகள் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு
    · ரோலிங் ஸ்டாக் பராமரிப்பு மற்றும் மாற்றியமைத்தல்
    · ரோலிங் ஸ்டாக்/உருள் முதற்றொகுதி உற்பத்தி
    · ரயில் இயக்க பணிகள் (ரயில் / கார் இயக்கத்தில் நேரடியாக ஈடுபடும் டிரைவர்கள் கண்டக்டர்கள் மற்றும் தொழிலாளர்கள்)

வேளாண்மை, வனவியல் மற்றும் மீன்வள அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டது

  • வேளாண்மைபொதுவான பயிர் வளர்ப்பு (பயிர் மேலாண்மை, சேகரிப்பு/சரக்கு அனுப்புதல்/வேளாண் பொருட்களை தேர்ந்தெடுத்தல் போன்றவை), பொதுவான கால்நடை வளர்ப்பு (தீவன மேலாண்மை, சேகரிப்பு/சரக்கு அனுப்புதல்/கால்நடைப் பொருட்களை தேர்ந்தெடுத்தல் போன்றவை)

  • மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புமீன்வளம் (உற்பத்தி/மீன்பிடிச் சாதனத்தை பழுதுநீக்கம் செய்தல், நீர்வாழ் உயிரினங்கள் அல்லது தாவரங்களை தேடுதல், மீன்பிடிச் சாதனத்தை/மீன்பிட இயந்திரத்தை இயக்குதல், நீர்வாழ் உயிரினங்கள் அல்லது தாவரங்களை சேகரித்தல், பிடிபட்டவற்றை பதப்படுத்துதல்/சேமித்தல், பாதுகாப்பு, உடல்நலம் போன்றவற்றை உறுதிசெய்தல்), மீன்வளம் (உற்பத்தி/பழுதுநீக்கம் செய்தல்/மீன்வளச் சாதன மேலாண்மை, வேளாண்மை/சாகுபடி/நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்களை பதப்படுத்துதல் ஆகியவற்றை மேலாண்மை செய்தல், பாதுகாப்பு, உடல்நலம் போன்றவற்றை உறுதிசெய்தல்

  • உணவு மற்றும் பான உற்பத்திபொதுவான உணவு மற்றும் பான உற்பத்தி (உணவு மற்றும் பான உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல் (மதுபான வகைகள் தவிர்த்து) பாதுகாப்பு மற்றும் உடல்நலம்)

  • உணவு சேவைகள் தொழில்துறைபொதுவான உணவு சேவைகள் (உணவு மற்றும் பானங்களைத் தயாரித்தல், வாடிக்கையாளர் சேவை, ஸ்டோர் மேலாண்மை)

  • வனவியல்மர வளர்ப்புப் பிரிவு, மரக்கட்டைகள் உற்பத்தி போன்றவை

  • மரத் தொழில்மரம் அறுக்கும் தொழில் மற்றும் ஒட்டு பலகை தொழில் போன்றவற்றில் மர பதப்படுத்துதல்.

ஜப்பானில் உள்ள மிகை அனுபவமுள்ள SSWக்கள் குறித்த அறிமுகம்

பின்வரும் வீடியோக்கள் மார்ச் 2022க்குள் தயாரிக்கப்பட்டன. ஏப்ரல் 2024 இல், "இயந்திர பாகங்கள் மற்றும் கருவிகள்/தொழில்துறை இயந்திரங்கள்" என்பது "தொழில்துறை தயாரிப்புகளின் உற்பத்தி" என மாற்றப்பட்டது.

Blossom! in Japan.

பின்வரும் வீடியோக்கள் மார்ச் 2022க்குள் தயாரிக்கப்பட்டன. ஏப்ரல் 2024 க்குப் பிறகு, 16 தொழில்துறை துறைகள் உள்ளன.

  • Play movie in a new window:14 in demand occupations
  • Play movie in a new window:Specified Skilled Workers supported in work & life
  • Play movie in a new window:utilize your skills experience
Page Top