உங்களுடைய பெரும்பாலான பணித் திறனை ஜப்பானில் வளர்த்துக்கொள்ள விரும்புகிறீர்களா?
சில ஜப்பானியத் தொழில்துறைகளில் உடனடியாக பணியாற்றத் தயாராக வெளிநாடுகளில் உள்ள தகுதியுள்ள நிபுணர்களை வரவேற்பதற்காக ஏப்ரல் 2019-இல் குறிப்பிட்ட திறன்மிகு பணியாளர் (SSW) என்ற வசிப்பிடத்திற்கான ஒரு புதிய தகுநிலையை ஜப்பான் நிறுவியுள்ளது. இந்தப் பக்கமானது, இதுநாள் வரை பெற்ற சிறப்பறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்தி ஜப்பானில் ஒரு துடிப்பான பங்கு வகிக்க விரும்பும் எவர் ஒருவருக்கும் உரிய தகவலை அளிக்கிறது.
பின்வரும் வீடியோக்கள் மார்ச் 2022க்குள் தயாரிக்கப்பட்டன. ஏப்ரல் 2024 இல், "இயந்திர பாகங்கள் மற்றும் கருவிகள்/தொழில்துறை இயந்திரங்கள்" என்பது "தொழில்துறை தயாரிப்புகளின் உற்பத்தி" என மாற்றப்பட்டது.